Posts filed under ‘தகவல்கள்’

ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..!

அண்ணாத்த ஓசை செல்லா… தொடர்ந்து பயர்ஃபாக்ஸ் பயன்படுத்தி வருபவர். அதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். பெ.மகேந்திரனின் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தான் பயன் படுத்தும் பயர்ஃபாக்ஸ் இணைய உலாவியில் சரியாக தெரியவில்லை என்றதும் அதற்கும் ஒரு பதிவு போட்டு விட்டார்.

ஆனால்.. அண்ணாத்த.. இப்படி பதிவு போடுவதோடு அவ்வப்போது மற்றவர்களின் பதிவுகள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது. நான் ஏற்கனவே பயர்ஃபாஸ் போட்ட பதிவிலேயே பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதில் இன்று இவர் சொல்லும் ஜஸ்டிபை பிரச்சனை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

தவிர, நம்ம ரவிசங்கர் (இவருக்கான சுட்டி என் வலைப்பதிவில் இடதுபக்கம் இருக்கிறது) ஏற்கனவே பல இடங்களில் பலமுறை பேசி வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவணித்து வந்திருந்திருக்கலாம். பரவாயில்லை. என் சிறு மூளைக்கு பட்டதை நான் சொல்கிறேன்.

முதலில் இந்த பக்கத்தில் இருக்கும் குரங்குத்தலை நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த பக்கத்திற்கு போனால்.. வலது ஓரம் INSTALL THIS SCRIPTS என்று இருக்கும் பொத்தானை க்ளிக் செய்து அந்த ஸ்க்ரிப்ட்-ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போது பயர்ஃபாக்ஸை க்ளோஸ் செய்து விட்டு.. மீண்டும் திறந்து நீங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்ட (ஜஸ்டிபை செய்த பதிவு) பக்கத்தை திறந்து படியுங்கள். மேட்டர் ஓவர்!

Advertisements

ஜூலை 31, 2007 at 9:27 முப 11 பின்னூட்டங்கள்

தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?
இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?

இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்!

தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது.

சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.

இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

என் மொபைலில் ஆத்திச்சூடி!

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார்.பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 20, 2007 at 1:14 பிப 19 பின்னூட்டங்கள்

ஆகஸ்ட்-5ல் பதிவர் பட்டறை பெயர் கொடுத்தாச்சா?

banner.gif

 

நண்பர்களே!

சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பதிவர் பட்டறை நடக்க இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புதியவர்கள் பழையவர்கள் என்று மொத்தம்  150 பேருக்கு மட்டுமே அனுமதி.

அதிலும் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் அனுமதி.

முன்பதிவு செய்ய http://tamilbloggers.org என்ற பக்கத்திற்கு செல்லவும். இந்த தளம்.. விக்கி மொன்பொருளை கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த தளத்தின் இடது ஓரம் இருக்கும் பங்கேற்போர் என்பதனை சொடுக்கினால் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே இடது ஓரத்தின் மேல் பகுதியில் எடிட் பொத்தான் இருக்கும். அதனை சொடுக்கி, உங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

நினைவுக்கு:- இந்த தளத்தில் உங்கள் பெயரை நீங்கள் பதிவு செய்துகொள்ள.. இங்கே நீங்கள் லாகிங் செய்வது அவசியம். + நல்லதும் கூட!

ஜூலை 7, 2007 at 7:12 முப 2 பின்னூட்டங்கள்

சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?!

இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு பட்ட பிணிகளினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பணம் படைத்தவர் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளுக்கு கூட சில பணக்கார வியாதிகள் வந்த வண்ணமிருக்கின்றன. அரசாங்க மருத்துவ மணைகளில் போதிய வசதியின்மை, நோய் கண்டவர்களை கீழ்த்தரமாக நடத்தும் முறை, தங்களின் சொந்த மருத்துவமணைக்கு நோயாளிகளை திசை திருப்பும் மருத்துவர்கள் என்று ஏகப்பட்ட சார்புடைய கருத்துக்களை வைக்க முடியும்.

அரசாங்க மருத்துவமணைகளின் நிலை இதுவெனில் தனியார் மருத்துவமணைகளின் செயல் பாடுகள் குறித்து சொல்லவே வேண்டாம்.

சாதாரண காய்ச்சல் என்று போகிறவன் கூட.. ஆத்தா தாலியையோ, பொண்டாட்டியின் தாலியையோ அடகு வைத்து அல்லது விற்று தான் வீடு திரும்ப வேண்டி இருக்கிறது. (இங்கு ‘தாலி’ என்பதை பொன் என்று கொள்க)

விளைவு…

தெருவுக்கு ஒரு டாக்டர் முளைக்கிறார். (இவர்களில் 99.9% பேர் போலி மருத்துவர்கள்.) தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று எந்த விசயத்துக்கும் வெறும் இருபது முதல் முப்பது ரூபாய் தான் வாங்குகிறார். வண்ண வண்ணமான மாத்திரைகளை அவரே கொடுக்கிறார். தனியாக மருந்துச்செலவும் கிடையாது. ஏழைகளின் கூட்டம் அலை மோதுகிறது.

நகரங்களின் தெருவுக்கொரு டாக்டர் என்று வருபவர்கள் அனேகம் பேர் தங்களை சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். கிராமப் புரங்களில் தங்களை நேரடியாக எம்.பி.பி.எஸ் என்றே கூறி வருவதை நாம் செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

பள்ளியின் இறுதியாண்டைக்கூட முடிக்காத இவர்களில் பலர் நிஜ மருத்துவர்களிடம் உதவியாளராக சேருகின்றனர். சில ஆண்டுகளில் ஊசி போட, கோழி கிறுக்கலான எழுத்தை உணர்ந்துகொள்ள என்று பயிற்சி எடுத்த பின் தனியாக டாக்டர் ஆகின்றார்கள்.

ஏதோவொரு நோய்க்கு மருத்துவரைப் பார்த்து அவர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுடன் மருந்துக் கடையை அணுகினால்.. சீட்டை பார்த்து விட்டு கடைக்காரர் நம்மிடம் கேட்பார் ‘என்ன செய்யுது?’, நாமும் டாக்டரிடம் சொல்லிய அதே விசயத்தத இவரிடம் சொல்லுவோம்.

நாம் சொல்லும் நோயின் தன்மைக்கும் மருத்துவர் எழுதிகொடுத்திருக்கும் கிறுக்கல் எழுத்தின் முதல் எழுத்தைக்கொண்டு நமக்கு தேவையான மருந்தை எழுத்துத் தருவார் கடைக்காரர். (டி.பார்ம்- படித்தவர்கள் தான் ம்ருந்துகடை வைத்திருக்கலாம் என்பது சட்டம். ஆனால்.. அந்த டி.பார்ம்-கள் கையெழுத்து மட்டும் கொண்டு பல மருந்துகடைகள் நடந்து வருகிறது)

மூலம், பௌவுத்ரம், விரை வீக்கம், ஆண்மைக்குறைவா எங்களிடம் வாங்க என்று தமிழகம் முழுவதும் மஞ்சல், சிகப்பு, ரோஸ் என்று ஒற்றை வண்ணத்தில் சுவர்களில் ஒட்டப்பட்ட பல போஸ்டர்களை நம்மிள் பலரும் பார்த்திருக்கலாம்.

நான் அப்படிப் பார்த்த இரு போஸ்டர்கள் என் கவனத்தை ஈர்த்தது. காரணம்… இரண்டு போஸ்டர்களும் வெவ்வேறு மருத்துவர்களுடையது. ஆனால் இருவரும் பதிவு எண்களாக ஒரே எண்ணை(கொல்கத்தா அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்) கொடுத்திருந்தது குழப்பியது.

விசயத்தை பத்திரிக்கை நண்பர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறேன். விரைவில் போலி டாக்டர் செய்தியும், சோதனையும் தமிழகமெங்கும் நடக்கலாம்.

🙂

ஜூன் 12, 2007 at 7:44 முப 30 பின்னூட்டங்கள்

பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?

நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோளர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி.
கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம்.

1. மற்ற உலாவிகளை விட பயர்பாக்ஸ் பாதுகாப்பானது. இதன் மூலம் நாம் இணையத்தை அணுகும் போது.. அந்த பக்கத்தில் இருக்கும் படங்களால் பக்கம் டவுண்ட்லோடு ஆகா.. நேரம் அதிகம் செலவாகும். படத்தினை விட நமக்கு செய்தி முக்கியமானதாக இருக்கலாம். அப்படியான தருணங்களில் பயர்பாக்ஸ் செட்டிங் பகுதியில் படங்கள் தேவையில்லை என்ற பொத்தானை நாம் க்ளிக் பண்ணி இருந்தோமேயானால்.. வலைப்பக்கம் இலகுவாக திறந்துகொள்ளும்.

2. பயர்பாக்ஸ் பாவிப்பவராக இருந்தால்.. எ-கலப்பை மாதிரியான எந்த மென்பொருளையும் தேடி ஓட வேண்டியதில்லை. தமிழ்விசை என்ற செயலியை நிறுவிக்கொண்டால் போதும்.. ஆறு வகை தட்டச்சு முறைகள் கொண்ட தமிழ் எழுதி கிடைத்து விடும். இதை எ-கலப்பை நிறுவுவதை விட வேகமாக நிறுவிக்கொள்ள முடிகிறது. மேலும் வீடு,அலுவலகம் தவிர்த்து ப்ரவுசிங் செண்டர் மாதிரியான இடங்களிலும் பயர்பாக்ஸை பயன்பாட்டுக்கு உள்ளன. அங்கேயும் இதனை சிலவினாடிகளில் நிறுவிக்கொண்டு தமிழில் நாம் விரும்பும் தட்டச்சு முறையில் எழுதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

3. பயர்பாக்ஸ் தமிழிலும் கிடைக்கிறது. இதில் எல்லா செயல் முறைகளும் தமிழில் இருப்பதால் பாவிப்பது மிக எளிது.

4. வேலை பார்க்கும் போது பாடல் கேட்டும் பழக்கமுடையவரா நீங்கள்..?, பயர்பாக்ஸ் உலாவியில் இசையை கேட்டுக்கொள்ளக்கூடிய ப்ளேயேரையும் நிறுவிக்கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் இணையத்திலும் பாடல் கேட்கலாம். அல்லது உங்கள் கணினியில் சேமிப்பில் இருக்கும் பாடல்களையும் கேட்கலாம்.

4. ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் உபயோகிப்பவராக இருந்தால் அதற்கனா செயலியை இயக்கிவிட்டால் உங்கள் உலாவியின் மூலையிலேயே மெயில் வந்த தகவல்களை பெற முடியும். தனியாக அந்தந்த தளங்களுக்குச் சென்று எட்டிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.

5. பயர்பாக்ஸில் TAB மூலம் அடுத்த சாரளத்தை திறப்பவரா நீங்கள். எத்தனை சாரளங்கள் திறந்து வைத்திருந்தாலும் அத்தனை சாரளங்களையும் ஒரே பக்கத்தில் பார்ப்பதற்கான செயலியும் கிடைக்கிறது.

6. அது போல TAB களுக்கு மாறும் போது 3D தோற்றத்தை தரும்படியான செயலி அசத்துகிறது.

இவை தவிர.. நாம் பார்க்கும் தளம், மெயில் போன்றவற்றில் இருக்கும் தேவையற்ற ஜாவா ஸ்க்ரிப் போன்றவைகளை செயல்படாமல் தடுக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் கூட செயலிகள் இருக்கின்றன.

இவை போன்ற ஏகப்பட்ட செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இந்த பக்கத்திற்கு அடிக்கடி எட்டிப்பார்த்தால் போதும்.

————

இது பூங்காவில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

http://poongaa.com/content/view/1770/1/

மே 25, 2007 at 1:13 பிப 19 பின்னூட்டங்கள்


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,325 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds