Posts filed under ‘சமூகம்/ சலிப்பு’

நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!

ரஜினி தலையில் கிழிக்கப்பட்ட டிக்கேட்

பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

* தமிழ்ச்செல்வி என்று நாமகரம் சூட்டப்பெற்ற நாயகி ஸ்ரேயா எல்லா பாடல்காட்சிகளிலும் மேலாடையின்றி, பாலிவுட் நடிகை மல்லிகாஷெராவத்தை நினைவு படுத்தியபடியே இருந்தார். ஏண்டாப்பா… கோடிகளில் எடுத்ததாக சொல்லிக்கிறாங்களே.. ஸ்ரேயாவுக்கு ஒரு துப்பட்டாவுக்கு கொஞ்சம் சேர்த்து பட்ஜெட் ஒதுக்கக்கூடாதே!

* பழைய படங்களில் வரும் பாடல் காட்சிகளில் ஆடும் நாயகன் காலில் செருப்பு அணிந்திருக்க, நாயகி வெற்றுக்காலுடன் ஆடுவார். அதே போல முதல் பாடலில் நடிகை நயந்தாரா வெற்றுக்காலுடன் ஆடி இருக்கிறார். (ஸ்டார் போட்ட முதல் பாராவில் இருக்கும் கடைசி வரிகளை கொஞ்சம் மாற்றி வாசித்துக்கொள்ளவும்.. ரிபீட்டே)

*அங்கவை-சங்கவை என்று இரண்டு பெண்பாத்திரங்கள். இவர்கள் படத்தின் படி சாலமன் பாப்பையாவின் வாரிசுகள். முகத்தில் கருப்பு சாயம் அடிக்கப்பட்டு.. நகைச்சுவை என்ற பெயரில் ஷங்கர் செய்திருக்கும் வேலையை ரசிக்க முடியவில்லை. கருப்பு நடிகருக்கு சிகப்புச்சாயம் பூசி அழகு பார்த்த ஷங்கரின் அழுக்கு மனம் இங்கேயும் வெளிப்பட்டது.

* கதை நாயகன் கருப்பு ரஜினி கொள்ளை அடித்த வில்லன்களின் கருப்பு பணத்தை வெளுப்பாக்க, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த மக்களை காட்டி தன் அழுக்கு மனதின் மதவெறியையும் காட்டி விட்டார்கள் படக்குழுவினர். நம் நாட்டைப் பொருத்த அளவில் ஹவாலா மாதிரியான காரியங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருவது மார்வாடிகள். அதற்கு பின் குஜராத்திகள், ஜெயின் ஷாக்கள். (இஸ்லாமியர்களின் பங்கு இவர்களை விட குறைவே!)

* பல ஆண்டுகாலமாக பாலியல் உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒரு சமூகம் இப்போது தான் கொஞ்சமேனும் தன் உரிமைகளை மீட்டு எடுத்து வருகிறது. திருநங்கைகள் தொடர்ச்சியாக திரைப்படங்களில் கொச்சை படுத்தப்பட்டு வருகிறார்கள். அதற்கு எதிராக சில குரல்களே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திலும் கூட..,

ரஜினி வெளிநாட்டில் இருந்து வந்த பின் அவருக்கென பெண்களை கேட்வாக் நடத்தி அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார் விவேக். அப்போது ஒரு பெண்ணை பார்த்து, ‘ஹாய் முன்ஸ்’ என்று அழைப்பார் விவேக். ‘என்னது முன்ஸா..?’ என்று ரஜினி கேட்க, ‘ஆமா.. இவன் முனுசாமி, நம்ம பையன் தான். போன வாரம் தான் அப்ரேசன் செய்துகிட்டான்.’ என்று ஆப்ரேசன் செய்துகொண்ட ஒருவரை ஆண் விகுதியிலேயே அழைப்பார்.

அட! நாதாரிகளா… ஒங்களுக்கு எத்தன தடவை சொன்னாலும் ஏண்டா புரிய மாட்டேங்குது. எப்போதுமே சிறுபான்மையினரையும், விளிம்புநிலை மக்களையும் ஏண்டா இப்படியே காட்டுறீங்க.. நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க!? த்துத்தெரி!!!!

Advertisements

ஜூன் 16, 2007 at 7:40 முப 31 பின்னூட்டங்கள்

சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?!

இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு பட்ட பிணிகளினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பணம் படைத்தவர் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளுக்கு கூட சில பணக்கார வியாதிகள் வந்த வண்ணமிருக்கின்றன. அரசாங்க மருத்துவ மணைகளில் போதிய வசதியின்மை, நோய் கண்டவர்களை கீழ்த்தரமாக நடத்தும் முறை, தங்களின் சொந்த மருத்துவமணைக்கு நோயாளிகளை திசை திருப்பும் மருத்துவர்கள் என்று ஏகப்பட்ட சார்புடைய கருத்துக்களை வைக்க முடியும்.

அரசாங்க மருத்துவமணைகளின் நிலை இதுவெனில் தனியார் மருத்துவமணைகளின் செயல் பாடுகள் குறித்து சொல்லவே வேண்டாம்.

சாதாரண காய்ச்சல் என்று போகிறவன் கூட.. ஆத்தா தாலியையோ, பொண்டாட்டியின் தாலியையோ அடகு வைத்து அல்லது விற்று தான் வீடு திரும்ப வேண்டி இருக்கிறது. (இங்கு ‘தாலி’ என்பதை பொன் என்று கொள்க)

விளைவு…

தெருவுக்கு ஒரு டாக்டர் முளைக்கிறார். (இவர்களில் 99.9% பேர் போலி மருத்துவர்கள்.) தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று எந்த விசயத்துக்கும் வெறும் இருபது முதல் முப்பது ரூபாய் தான் வாங்குகிறார். வண்ண வண்ணமான மாத்திரைகளை அவரே கொடுக்கிறார். தனியாக மருந்துச்செலவும் கிடையாது. ஏழைகளின் கூட்டம் அலை மோதுகிறது.

நகரங்களின் தெருவுக்கொரு டாக்டர் என்று வருபவர்கள் அனேகம் பேர் தங்களை சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். கிராமப் புரங்களில் தங்களை நேரடியாக எம்.பி.பி.எஸ் என்றே கூறி வருவதை நாம் செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

பள்ளியின் இறுதியாண்டைக்கூட முடிக்காத இவர்களில் பலர் நிஜ மருத்துவர்களிடம் உதவியாளராக சேருகின்றனர். சில ஆண்டுகளில் ஊசி போட, கோழி கிறுக்கலான எழுத்தை உணர்ந்துகொள்ள என்று பயிற்சி எடுத்த பின் தனியாக டாக்டர் ஆகின்றார்கள்.

ஏதோவொரு நோய்க்கு மருத்துவரைப் பார்த்து அவர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுடன் மருந்துக் கடையை அணுகினால்.. சீட்டை பார்த்து விட்டு கடைக்காரர் நம்மிடம் கேட்பார் ‘என்ன செய்யுது?’, நாமும் டாக்டரிடம் சொல்லிய அதே விசயத்தத இவரிடம் சொல்லுவோம்.

நாம் சொல்லும் நோயின் தன்மைக்கும் மருத்துவர் எழுதிகொடுத்திருக்கும் கிறுக்கல் எழுத்தின் முதல் எழுத்தைக்கொண்டு நமக்கு தேவையான மருந்தை எழுத்துத் தருவார் கடைக்காரர். (டி.பார்ம்- படித்தவர்கள் தான் ம்ருந்துகடை வைத்திருக்கலாம் என்பது சட்டம். ஆனால்.. அந்த டி.பார்ம்-கள் கையெழுத்து மட்டும் கொண்டு பல மருந்துகடைகள் நடந்து வருகிறது)

மூலம், பௌவுத்ரம், விரை வீக்கம், ஆண்மைக்குறைவா எங்களிடம் வாங்க என்று தமிழகம் முழுவதும் மஞ்சல், சிகப்பு, ரோஸ் என்று ஒற்றை வண்ணத்தில் சுவர்களில் ஒட்டப்பட்ட பல போஸ்டர்களை நம்மிள் பலரும் பார்த்திருக்கலாம்.

நான் அப்படிப் பார்த்த இரு போஸ்டர்கள் என் கவனத்தை ஈர்த்தது. காரணம்… இரண்டு போஸ்டர்களும் வெவ்வேறு மருத்துவர்களுடையது. ஆனால் இருவரும் பதிவு எண்களாக ஒரே எண்ணை(கொல்கத்தா அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்) கொடுத்திருந்தது குழப்பியது.

விசயத்தை பத்திரிக்கை நண்பர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறேன். விரைவில் போலி டாக்டர் செய்தியும், சோதனையும் தமிழகமெங்கும் நடக்கலாம்.

🙂

ஜூன் 12, 2007 at 7:44 முப 30 பின்னூட்டங்கள்

கோவையில் பார்த்தது..

கோவை போயிருந்த போது.. இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல..
🙂

படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் முழு போஸ்டரையும் பார்க்கலாம்.

  

kovai-samiyar.jpg

நினைவுக்கு:-

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… நான் இந்த புது வீட்டுக்கு குடி வந்துட்டேன்.

மே 21, 2007 at 12:46 பிப 27 பின்னூட்டங்கள்


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,330 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds