ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..!

ஜூலை 31, 2007 at 9:27 முப 11 பின்னூட்டங்கள்

அண்ணாத்த ஓசை செல்லா… தொடர்ந்து பயர்ஃபாக்ஸ் பயன்படுத்தி வருபவர். அதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். பெ.மகேந்திரனின் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தான் பயன் படுத்தும் பயர்ஃபாக்ஸ் இணைய உலாவியில் சரியாக தெரியவில்லை என்றதும் அதற்கும் ஒரு பதிவு போட்டு விட்டார்.

ஆனால்.. அண்ணாத்த.. இப்படி பதிவு போடுவதோடு அவ்வப்போது மற்றவர்களின் பதிவுகள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது. நான் ஏற்கனவே பயர்ஃபாஸ் போட்ட பதிவிலேயே பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதில் இன்று இவர் சொல்லும் ஜஸ்டிபை பிரச்சனை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

தவிர, நம்ம ரவிசங்கர் (இவருக்கான சுட்டி என் வலைப்பதிவில் இடதுபக்கம் இருக்கிறது) ஏற்கனவே பல இடங்களில் பலமுறை பேசி வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவணித்து வந்திருந்திருக்கலாம். பரவாயில்லை. என் சிறு மூளைக்கு பட்டதை நான் சொல்கிறேன்.

முதலில் இந்த பக்கத்தில் இருக்கும் குரங்குத்தலை நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த பக்கத்திற்கு போனால்.. வலது ஓரம் INSTALL THIS SCRIPTS என்று இருக்கும் பொத்தானை க்ளிக் செய்து அந்த ஸ்க்ரிப்ட்-ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போது பயர்ஃபாக்ஸை க்ளோஸ் செய்து விட்டு.. மீண்டும் திறந்து நீங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்ட (ஜஸ்டிபை செய்த பதிவு) பக்கத்தை திறந்து படியுங்கள். மேட்டர் ஓவர்!

Advertisements

Entry filed under: தகவல்கள், பதிவர் சதுரம் ;-)).

நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்! பகை- குறும்படம்

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. பொன்ஸ்  |  11:46 முப இல் ஜூலை 31, 2007

  பாலா, நல்ல பதிவு 😉

  இத்தனை ‘சுட்டி’யான இடுகையை நீங்க வலைச்சரத்தில் இட்டிருக்கலாமே? 😉

  மறுமொழி
 • 3. கைனாட்டு  |  12:10 பிப இல் ஜூலை 31, 2007

  //இடது ஓரம் INSTALL THIS SCRIPTS என்று இருக்கும் பொத்தானை க்ளிக் செய்து அந்த ஸ்க்ரிப்ட்-ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.//

  கண்ணு தெரியாதா அது ரைட் சைடுல இருக்கு.

  மறுமொழி
 • 4. ♠யெஸ்.பாலபாரதி♠  |  12:36 பிப இல் ஜூலை 31, 2007

  அவுஸ்த்ரேலியா கைநாட்டு,

  மாத்திட்டேன். 🙂

  மறுமொழி
 • 5. ஜெஸிலா  |  12:43 பிப இல் ஜூலை 31, 2007

  நானே அவருக்கு உங்க சுட்டியை தர வேண்டுமென்று தேடினேன், நீங்களே ஒரு பதிவா போட்டுட்டீங்க 🙂

  மறுமொழி
 • 6. லக்கிலுக்  |  12:49 பிப இல் ஜூலை 31, 2007

  இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரே கதின்னு இருக்கும் என்னை மாதிரி பாமரர்களுக்கு ஒண்ணுமே புரியலை 😦

  மறுமொழி
 • 7. விஜயன்  |  5:28 முப இல் ஓகஸ்ட் 1, 2007

  நானும் ‘செல்லாவின்’ பதிவைப் பார்த்த பின் தான் ‘நெருப்பு நரி’க்கு மாறினேன். இதெ பிரச்சினை எனக்கும் வந்தது.

  ஒழுங்காய் இருந்த எக்ஸ்புளோரரை கெடுத்து விட்டேனே என்று வருந்திக் கொண்டிருந்தேன்.

  நல்ல வேளையாக இந்த பதிவு என்னைக் காப்பாற்றியது.

  மிக்க நன்றி

  மறுமொழி
 • 8. osai chella  |  6:05 முப இல் ஓகஸ்ட் 1, 2007

  ithu ellam firefox 3 varumpoothu velai seyyamalum pookalum! waan sonnathu vettu onRU thuNdu reNdu solution ma kannu! visayam ennannaa CSS pirassinai eillama kalar illama simpilaa padikka oru vazi. RSS reader maathiri! marrapadi neenga sonnathayum seyyalaam. padam poottu kaattunaathaan makkalukku puriyum karathukkaaka naan seythen! santhipom indtha vaaram!

  மறுமொழி
 • 9. கைனாட்டு  |  10:05 முப இல் ஓகஸ்ட் 1, 2007

  //கண்ணு தெரியாதா அது ரைட் சைடுல இருக்கு.//

  யாரை கேட்டு என்னோட பின்னூட்டத்த எடிட் பண்ணாய்?
  ரைட் ஃபார் இன்பர்மேசன் ஆக்டுல பிராது கொடுப்பேன்…எங்க அந்த சொம்பும் ஆலமரமும்? பஞ்சாயத்து..

  மறுமொழி
 • 10. ரவிசங்கர்  |  11:45 முப இல் ஓகஸ்ட் 1, 2007

  firefox3 வந்தால் இந்த நீட்சிகள் வேலை செய்யுமா என்று கவலைப்படத் தேவை இல்லை. ஏனெனில் அதில் தமிழ் தானாகவே நன்றாகத் தெரியும் ஆதலாம் இந்த நீட்சிகள் தேவைப்படவே செய்யாது

  மறுமொழி
 • 11. mayuran  |  3:26 முப இல் ஓகஸ்ட் 4, 2007

  மிக்க நன்றி 🙂

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,356 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

Feeds


%d bloggers like this: