தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

ஜூலை 20, 2007 at 1:14 பிப 19 பின்னூட்டங்கள்

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?
இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?

இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்!

தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது.

சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.

இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

என் மொபைலில் ஆத்திச்சூடி!

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார்.பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Entry filed under: தகவல்கள்.

ஒன்று- லக்கிக்கு இருபத்திநாலு மணி நேர அவகாசம்!! நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்!

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. இராம்  |  1:26 பிப இல் ஜூலை 20, 2007

    அட சூப்பரான மேட்டரா இருக்கே…. 🙂

    மறுமொழி
  • 2. Sivabalan  |  1:54 பிப இல் ஜூலை 20, 2007

    Excellent!

    Great Job!

    Thanks for Sharing!

    மறுமொழி
  • 3. செந்தழல் ரவி  |  1:56 பிப இல் ஜூலை 20, 2007

    ஓ…வெரிகுட்…

    இது பற்றி என்னால் விரிவாக சொல்லமுடியும்…இருந்தாலும் பதிவர் பட்டறையில் ஹெச்.டி.எம்.எல் வகுப்பு எடுக்கும்ப்போது ஆங்காங்கே எடுத்துவிடுறேன்…

    ஆனால் என்னுடைய வரலாற்று புகழ் பெற்ற பதிவுகளை மென்நூலாக்க சம்மதம் வேண்டும் ஓக்கே

    மறுமொழி
  • 4. மாஹிர்  |  2:20 பிப இல் ஜூலை 20, 2007

    நல்ல சேதி..

    மறுமொழி
  • 5. இராதாகிருஷ்ணன்  |  2:50 பிப இல் ஜூலை 20, 2007

    தகவலுக்கு நன்றி! வரவேற்க்கத்தக்க முயற்சி. இணைய தளத்தைத் (http://www.thinnai.info/downloads.php) தமிழில் இட்டார்களென்றால் நன்றாயிருக்கும்.

    மறுமொழி
  • 6. ♠யெஸ்.பாலபாரதி♠  |  5:36 முப இல் ஜூலை 21, 2007

    இந்த இடுகை மீள்பதிவு செய்யப்படுகிறது. 22.0.7.07

    மறுமொழி
  • 7. ♠யெஸ்.பாலபாரதி♠  |  5:38 முப இல் ஜூலை 21, 2007

    //3. செந்தழல் ரவி | July 20th, 2007 at 1:56 pm

    ஓ…வெரிகுட்…

    இது பற்றி என்னால் விரிவாக சொல்லமுடியும்…//

    என்ன இது..?

    நாம் எத்தனையோ உரையாடல்களிலும் சந்திப்புக்களிலும் இது பற்றி ஒரு முறை கூட சொன்னதில்லையே ரவி?!?
    😦

    மறுமொழி
  • 8. t.b.r.joseph  |  6:08 முப இல் ஜூலை 21, 2007

    மிக்க நன்றி பாலா,

    பெரியார் வாழ்க்கையை இறக்கினேன். நன்றாக இருக்கிறது.

    மறுமொழி
  • 9. அல்வாசிட்டி.விஜய்  |  12:01 பிப இல் ஜூலை 21, 2007

    நான் ஏறக்குறைய இரண்டாடுக்கு முன் இந்த மாதிரியான முயற்சி ஒன்றை ஆரம்பித்தேன். அதற்காக எழுதிய ஒரு பதிவு இங்கே…

    http://halwacity.com/blogs/?p=171

    அப்புறம் சில மொபைல் புத்தகங்களை சோதனை முயற்சியாக, ஒரு வலைத்தளம் உருவாக்கி ஏற்றி வைத்தேன்… அது இங்கே…
    http://www.halwacity.com/mobile_halwa/

    மேல் சொன்ன வலைத்தளத்தை GPRS -ல் போய் பார்த்தால் சில் மென்நூல்களை இறக்கிக் கொள்ளலாம்….

    அந்தோ பரிதாபம்! இந்த முயற்சியில் என்னால் தொடர்ந்து ஈடுபடமுடியவில்லை. முதல் காரணம் எனக்கு பூவா கொடுக்கும் வேலை அப்படி. வேலை வந்தால் மொத்தமாக வரும்… இல்லையெனில் இல்லை…. அப்படியாக ஒரு வருடம் இந்த மொபைல் புத்தகங்கள் பக்கமே போக முடியவில்லை. அப்புறம் ஈடுபாடும் குறைந்தது. அந்த வலைத்தளத்தையும் முழுவதுமாக பராமரிக்கவுமில்லை.

    மொபைல் புத்தக முயற்சி முழு வீச்சில் mobileveda வழியாக முழுமையடைந்து வருகிறது என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது. பதிவுக்கு நன்றி

    மறுமொழி
  • 10. லெனின்  |  5:45 முப இல் ஜூலை 23, 2007

    மிக நல்ல விசயம் அண்ணா.. நன்றிகள்..

    மறுமொழி
  • 11. maya  |  11:26 முப இல் ஜூலை 23, 2007

    but in srilanka i cant

    மறுமொழி
  • 12. princenrsama  |  1:44 பிப இல் ஜூலை 23, 2007

    பதிவர்களின் பதிவுகளையும், மற்றும் தளங்களின் இடுகைகளையும் செல்லில் கொண்டுவரும் தொழைல் நுட்பத்தை வெளியிட உள்ளார்கள். அப்போது அவற்றை பயன்படுத்தி ரவி-யும் பதிவுகளை செல்நூலாக்கிக் கொள்ளலாம்!

    மறுமொழி
  • 13. kayalvizhi  |  1:11 முப இல் ஜூலை 26, 2007

    you may be a dearest friend yo ravi.but it is quite undigestable to see him calling you monkey.balabarathi, why do not you advice him to stop using such horrid language,’nadhari, mokkai, kolaivari ‘ .horrid.

    மறுமொழி
  • 14. வெற்றி  |  6:22 பிப இல் ஜூலை 26, 2007

    பாலபாரதி,
    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்பது போல தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

    பி.கு:- என்ன முந்தி மாதிரி இப்ப உங்களைத் தமிழ்மண பக்கத்தில் அடிக்கடி காணமுடியவில்லை?
    🙂

    மறுமொழி
  • 15. கோபி  |  8:34 முப இல் ஜூலை 27, 2007

    நல்ல முயற்சி, கணேஷ்ராம்க்கு பாராட்டுக்கள்.

    பின்னூட்டத்தில் அல்வாசிட்டி.விஜய் சொன்னது போல அவர் இரண்டாண்டுக்கு முன்பே இந்த மாதிரியான மென்நூலாக்க முயற்சியை செய்திருந்தார்.

    அப்போதே அந்த மென்நூல்களை பதிவிறக்கி எனது செல்பேசியில் சோதித்திருக்கிறேன். செல்பேசியில் முதன்முறையாய் தமிழில் எழுத்துக்களை படித்த போது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

    தமிழ்க்கணிமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இது போன்ற தொழில்நுட்ப முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும்.

    வாழ்த்துக்கள்

    மறுமொழி
  • 16. மின்னுது மின்னல்  |  9:30 முப இல் ஜூலை 27, 2007

    கல்யாண வாழ்த்துக்கள் 🙂

    மறுமொழி
  • 17. princenrsama  |  12:10 பிப இல் ஜூலை 30, 2007

    அண்ணே! இதுக்கு அப்புறம் ஏதோ பதிவு போட்டதா ஒரு பட்சி சொல்ல்லுது.. ஆனா காணோமே! என்ன நடந்தது… எதுவும் கொலைவெறித் தாக்குதலா?

    உங்க தரப்பில இருந்து.

    மறுமொழி
  • 18. லெனின் பொன்னுசாமி  |  4:50 பிப இல் ஓகஸ்ட் 5, 2007

    //ஆனால் என்னுடைய வரலாற்று புகழ் பெற்ற பதிவுகளை மென்நூலாக்க சம்மதம் வேண்டும் ஓக்கே//

    ரவி.. லிங்க் ப்ளீஸ்

    மறுமொழி
  • 19. ப. குமார்  |  11:22 முப இல் ஓகஸ்ட் 7, 2007

    பாலபாரதி அண்ணா,
    இன்றுதான் திரு. கணேஷ்ராம் என்னைச் சந்தித்துச் சென்றார். இந்த நன்முயற்சி குறித்து என்னிடம்கூறி இதற்கு எங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியைக் கேட்டுள்ளார். நாங்களும் உதவுதாகக் கூறியுள்ளோம். மிக நல்ல முயற்சியான இது வெற்றியடைய எல்லாரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்வோம்.

    மறுமொழி

t.b.r.joseph -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,731 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

Feeds