ஒன்று- லக்கிக்கு இருபத்திநாலு மணி நேர அவகாசம்!!

ஜூலை 17, 2007 at 10:12 முப 16 பின்னூட்டங்கள்

நண்பர்களே!

ஆளாளுக்கு பதிவர்குறித்த விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ.. நானும் ஒரு விளையாட்டை தொடங்கி வைக்கிறேன். அது தான் ஒன்று.(முன்னமே சிலர் எட்டு போட அழைத்திருக்கிறார்கள். அதை எழுதுவது அலுப்பாகவும், சலிப்பாகவும் இருக்கு. என் புலம்பல்கள் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஒரு காரணம்)

ஏற்கனவே சுற்றில் வந்த பதிவுகள் போலத்தான்.. இந்த ஒன்று என்றாலும்.. இதில் ஒரே ஒரு கேள்வி கேட்கனும். அதுவும் ஒருத்தர் கிட்ட மட்டும். அந்த ஒரு கேள்விக்கு பதிலை ஒரு வரியிலையும் சொல்லலாம். ஒரு கட்டுரையோ எழுதலாம். அது எழுதுபவர்களின் சாமர்த்தியத்தினைப் பொறுத்தது…ஒரு நாள் மட்டுமே அவகாசம். இருபத்திநாலு மணி நேரத்தில் பதில் பதிவு போட்டுவிடணும். கூடிய வரையில் இந்த ஒன்று நாம் கேட்டுக்கும் அந்த பதிவரின் இன்னொரு முகத்தினை வெளியே கொண்டுவருவது போல அமைந்தால் நலம். சரி.. இனி ஆட்டத்துக்கு போகலாம். (இதனை பதில் சொல்லும் பதிவர் அவர் பதில் பதிவில்.. தொடக்கத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ சேர்க்க வேண்டும் என்பது மட்டும் நிபந்தனை)

வலை உலக சின்னகுத்தூசி, சுனாமியார், என்று பலராலும் அழைக்கப்படும் தோழன் – லக்கிலுக்கிடம் ரொம்ப நாள ஒரு கேள்வி கேட்கனும்னு நெனைச்சு கிட்டு இருக்கேன். அவரும் பதில் சொல்லுவார் என்ற எண்ணத்தில் ஆட்டத்தை தொடங்குகிறேன்.

பொதுவாக எங்கு சென்றாலும் கலைஞர்.கருணாநிதிக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் உங்களுக்கு கலைஞரிடம் பிடிக்காத குணம் எது?

இது தான் நான் லக்கிலுக்கிடம் கேட்க விரும்பும் கேள்வி. இதற்கான பதிலை இருபத்திநாலுமணி நேர அவகாசத்தில் சொல்லி இந்த ஆட்டத்தை தொடருவார் என்றும் நம்புகிறேன்.

Advertisements

Entry filed under: பதிவர் சதுரம் ;-)).

ஆகஸ்ட்-5ல் பதிவர் பட்டறை பெயர் கொடுத்தாச்சா? தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. வரவனையான்  |  10:22 முப இல் ஜூலை 17, 2007

  வே மாம்ஸு ஊரிலதான் இருக்கீயளா இல்லை, “உள்ளார” இருந்திட்டு வந்தீகளா

  மறுமொழி
 • 2. லக்கிலுக்  |  10:25 முப இல் ஜூலை 17, 2007

  //பொதுவாக எங்கு சென்றாலும் கலைஞர்.கருணாநிதிக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் உங்களுக்கு கலைஞரிடம் பிடிக்காத குணம் எது?//

  என்ன கொடுமை சார் இது? 😦

  மறுமொழி
 • 3. ayyanar  |  10:30 முப இல் ஜூலை 17, 2007

  எசகு பிசகான கேள்வியா போச்சே ..இந்த இண்டர்வியூல கேப்பானுங்க வாட் ஈஸ் யுவர் மைனஸ் பாயிண்டு ன்னு உடனே நாம கேர்புல்லா ஐ ஆஃப்ன் வொரி அபள்ட் மை வொர்க் னு சொல்லனும்

  லக்கி குறிப்பு போதுமா 🙂

  மறுமொழி
 • 4. ♠யெஸ்.பாலபாரதி♠  |  10:32 முப இல் ஜூலை 17, 2007

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,
  அய்ஸ்ஸ்ஸ்ஸ் எடுத்துக்கொடுக்குறியா…? மாப்பு நீயும் ஒரு நா மாட்டுவ.. யார்கிட்டயாவது?

  மறுமொழி
 • 5. ayyanar  |  10:45 முப இல் ஜூலை 17, 2007

  நாங்க அல்லாத்தையும் சமாளிப்பமாக்கும் ..அப்போ லக்கி உதவாமலியா போய்டுவாரு 🙂

  மறுமொழி
 • 6. மனதின் ஓசை  |  10:51 முப இல் ஜூலை 17, 2007

  இந்த ஆட்டம் நல்லருக்கு 🙂

  மறுமொழி
 • 7. nandha  |  10:55 முப இல் ஜூலை 17, 2007

  இந்த ஆட்டம் நல்லா இருக்கே.

  //அய்ஸ்ஸ்ஸ்ஸ் எடுத்துக்கொடுக்குறியா…? மாப்பு நீயும் ஒரு நா மாட்டுவ.. யார்கிட்டயாவது?//
  எல்லார்க்கிட்ட்டயும் ஒரே ஒரு வேண்டுகோள். பின் நவீனத்துவம்னா என்னன்னு மட்டும் அய்யனார்க்கிட்ட கேட்டுடாதீங்க…..

  மறுமொழி
 • 8. ♠யெஸ்.பாலபாரதி♠  |  10:59 முப இல் ஜூலை 17, 2007

  நந்தா…, ஆள் மாத்தி கேக்குறீங்க! அதுக்கு வேற ரெண்டு பேர் இருக்காங்க! அய்ஸ்ஸ்ஸ்க்கான கேள்வி வேற இருக்கு..? 🙂

  அது ரகசியமாக்கும்.. 😉

  மறுமொழி
 • 10. வெயிலான்  |  11:48 முப இல் ஜூலை 17, 2007

  ‘த ல’ யிலருந்து ஆரம்பிக்குதா ஆட்டம்?
  ம்…. நல்லாருக்கு !

  மறுமொழி
 • 11. ♠யெஸ்.பாலபாரதி♠  |  11:48 முப இல் ஜூலை 17, 2007

  அதுக்குள்ளயேவா?

  அசத்துறியே லக்கி! 🙂

  மறுமொழி
 • 12. Thooya  |  12:23 பிப இல் ஜூலை 17, 2007

  அய்ய்ய் லக்கிண்ணா மாட்டிகிட்டாரா
  கிகிகி

  மறுமொழி
 • 13. sivagnanamji  |  12:39 பிப இல் ஜூலை 17, 2007

  வினா எழுப்புவதிலும் ஒரு புத்திசாலித்தனம்
  தெரிகின்றதே…….

  மறுமொழி
 • 14. ♠யெஸ்.பாலபாரதி♠  |  12:53 பிப இல் ஜூலை 17, 2007

  சிஜி,

  பின்ன மண்டபத்துல யாரச்சும் எழுதி கொடுத்தா.. இத்தனை நாள் பதிவு போட்டு கிட்டு இருந்தேன்..?

  நற..நற.. கிர்ர்ர்ர்ர்ர்…நற..நற..

  மறுமொழி
 • 15. Top Posts « WordPress.com  |  12:01 முப இல் ஜூலை 18, 2007

  […] ஒன்று- லக்கிக்கு இருபத்திநாலு மணி நே… நண்பர்களே! ஆளாளுக்கு பதிவர்குறித்த விளையாட […] […]

  மறுமொழி
 • 16. அய்யனார் ரசிகர் மன்றம்  |  6:43 முப இல் ஜூலை 18, 2007

  எச்சரிக்கை!

  இந்த கிர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த கர் புர் போன்றவே எங்கள் தங்கத் தலைவர் அடர்கானகப் புலி அய்யனாருக்கே சொந்தமான உறுமல்கள்.! இனியும் இந்த கர்புர்களை உச்சரிப்பதை நிறுத்துமாறு இன்றே எச்சரிக்கை விடுகிறோம்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: