ங்கொய்யால…

ஜூலை 5, 2007 at 7:57 முப 29 பின்னூட்டங்கள்

கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை

கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்

புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்

யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்

அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்

எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி

அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று

குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்

மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.

Advertisements

Entry filed under: கவிதை.

சிரங்குகள் சொற்களற்ற சூன்யவெளியில்..

29 பின்னூட்டங்கள் Add your own

 • 1. கல்வெட்டு  |  8:03 முப இல் ஜூலை 5, 2007

  //மசுரு
  சோற்றுக்கு
  வழியில்லாமல்
  சாகிறான் விவசாயி.//

  :-(((

  மறுமொழி
 • 2. லக்கிலுக்  |  8:04 முப இல் ஜூலை 5, 2007

  தலை!

  என்ன இது? திடீர் கொலைவெறி!!!!???????

  மறுமொழி
 • 3. ப்ரியன்  |  8:06 முப இல் ஜூலை 5, 2007

  /*
  மசுரு
  சோற்றுக்கு
  வழியில்லாமல்
  சாகிறான் விவசாயி.
  */

  நிதர்சனம்…

  மறுமொழி
 • 4. கோவி.கண்ணன்  |  8:07 முப இல் ஜூலை 5, 2007

  என்னங்க பாலா,

  ‘முகமூடி’ கவிதை மாதிரி இருக்கு !

  என்ன ஆச்சு ?

  மறுமொழி
 • 5. கதிரவன்  |  8:13 முப இல் ஜூலை 5, 2007

  //மசுரு
  சோற்றுக்கு
  வழியில்லாமல்
  சாகிறான் விவசாயி.//

  விவசாயி மட்டுமல்ல

  மறுமொழி
 • 6. தமிழி  |  8:15 முப இல் ஜூலை 5, 2007

  கோபம் ‘கெட்ட’ ‘நல்ல’ வார்த்தைகள் பார்க்காதது தான்.

  ஒரு படைப்பாளிக்கு அறிவுரை கூறக்கூடாது தான்.

  கெட்ட வார்த்தையில் எழுதுவது பாமரனுக்காக என்றாலும் , வேண்டாமே ! ஒரு நல்ல படைப்பிற்கு.

  நன்றி.

  மற்றபடி, உங்கள் கோபம் மிக நியாயமானது.

  அப்படியே, உரமிட்டு மண்ணைக் கற்பழித்த சில விவசாயிகளினையும் சாடிவிடுங்களேன்.

  மறுமொழி
 • 7. Chella  |  8:30 முப இல் ஜூலை 5, 2007

  fire fox poochi parakkuthu!

  மறுமொழி
 • 8. ♠யெஸ்.பாலபாரதி♠  |  8:37 முப இல் ஜூலை 5, 2007

  செல்லா… இப்போ தான் கவனித்தேன். சரி செய்தாகிவிட்டது. 🙂

  மறுமொழி
 • 9. வெயிலான்  |  9:03 முப இல் ஜூலை 5, 2007

  நாய்க்குட்டி கழுத்துப்பகுதியில் தடவிட்டே இருந்துட்டே பின் ‘சொட்’ ன்னு தலைல தட்டியிருக்கிறேன் சிறு வயதில்,

  அது போல சுகமான வார்த்தைகளால் தடவிக் கொடுத்துக்கொண்டே யதார்த்தம் கடைசியில் தலை தட்டியிருக்குது தல!

  என் நண்பர் கவிஞர் மகுடேசுவரன் கவிதைகளிலும், இது போல நிஜம் முகத்தில் அறையும் வார்த்தைகளுடையதாகவே இருக்கும்.

  அவரையும் வலைப்பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

  மறுமொழி
 • 10. ♠யெஸ்.பாலபாரதி♠  |  9:08 முப இல் ஜூலை 5, 2007

  //அவரையும் வலைப்பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்//

  அழைத்து வாருங்கள். இதழ்களோடு இணைந்திருப்பவர்கள் இணையத்துப் பக்கம் வரவேண்டும். அவசியமானதும் கூட. (இணையத்திலேயே இருக்கும் சிலரை நான் இதழ்களின் பக்கம் நகர்த்த முயன்று வருகிறேன்) 🙂

  மறுமொழி
 • 11. குட்டிபிசாசு  |  9:13 முப இல் ஜூலை 5, 2007

  பொளந்து கட்டுங்க!!

  மறுமொழி
 • 12. முபாரக்  |  9:14 முப இல் ஜூலை 5, 2007

  சாட்டையடி! ருத்ர தாண்டவம்

  மறுமொழி
 • 13. த.அகிலன்  |  9:32 முப இல் ஜூலை 5, 2007

  இது இதான் தலையோட டச் கடைசி வரிகளைப் பாத்தாலே சும்மா அதிருதில்ல……….மனச்சாட்சி


  ..  (இதை பா.க.ச பின்னூட்டமாக தொண்டர்கள் கருதவேண்டாம்)

  மறுமொழி
 • 14. உண்மைத் தமிழன்  |  9:41 முப இல் ஜூலை 5, 2007

  எல்லாஞ் சரி சாமி..

  நல்ல விஷயத்தைச் சொல்லும்போது எதுக்கு இந்தத் தலைப்பு..?

  அப்புறம் இந்த ‘மசுரு, மட்டை’ன்னு இடைல சேர்க்காம கவிதை வரவே வராதா..?

  என்னமோ போங்க சாமி..

  மறுமொழி
 • 15. அருள்குமார்  |  10:56 முப இல் ஜூலை 5, 2007

  //இது இதான் தலையோட டச் கடைசி வரிகளைப் பாத்தாலே சும்மா அதிருதில்ல……….மனச்சாட்சி


  ..  (இதை பா.க.ச பின்னூட்டமாக தொண்டர்கள் கருதவேண்டாம்)
  //

  பா.க.ச வில் இருந்துகொண்டு தல சம்பந்தமாக சீரியஸான பின்னூட்டம் அகிலனிடமிருந்து இன்னொருமுறை வந்தால் அப்புறம் அவர் பா.க.ச அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க முடியாது என்பதை பா.க.ச சார்பாக இங்கே சுட்டிக்காட்டவும் சொல்லிக்கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன் என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்கிறேன்!

  மறுமொழி
 • 16. ♠யெஸ்.பாலபாரதி♠  |  11:02 முப இல் ஜூலை 5, 2007

  அருளே… என்ன நடக்குது இங்கன..
  சங்கத்தை மூடுங்கப்பா..
  இங்கேயுமா? 😦

  மறுமொழி
 • 17. Rasikow Gnaniyar  |  3:23 பிப இல் ஜூலை 5, 2007

  தலைப்பைப் பார்த்தாலே சும்மா அதிருதுல்ல..

  மறுமொழி
 • 18. kannan  |  4:19 பிப இல் ஜூலை 5, 2007

  Nalla irukku

  மறுமொழி
 • 19. kannan  |  4:20 பிப இல் ஜூலை 5, 2007

  Enga o padusa madurai iruki. kaafi atiseengale

  மறுமொழி
 • 20. இளா  |  8:27 பிப இல் ஜூலை 5, 2007

  //மசுரு
  சோற்றுக்கு
  வழியில்லாமல்
  சாகிறான் விவசாயி//
  நெத்தியில அடிச்சா மாதிரி வரிகள்.

  மறுமொழி
 • 21. சிறில் அலெக்ஸ்  |  9:17 பிப இல் ஜூலை 5, 2007

  இலக்கியம் பயனற்றதுண்ணு சொல்ல வர்றீங்களா?

  மறுமொழி
 • 22. வெற்றி  |  3:13 முப இல் ஜூலை 6, 2007

  பாலபாரதி,
  அருமையான கவிதை.
  கல்தோன்றி மண் தோன்ற முதலே வந்த மொழி என்று சும்மா பழம் பெருமை பேசிக் காலம் கடத்தி
  இருந்த நாட்டைப் பறிகொடுத்தும், பஞ்சத்திலும் சாகுது எம்மினம்… இதுகளைக் களையாமல் சும்மா மேடைக்கு மேடை உதவாத கொள்கைகளைப் பற்றி அடிபடுகிறார்கள் எம்மில் சிலர்… என்ன சொல்வது!

  பாராதியாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

  “தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
  வாயைத் திறந்து சும்மா; – கிளியே
  வந்தே மாதர மென்பார் “

  மறுமொழி
 • 23. plenin  |  5:27 முப இல் ஜூலை 6, 2007

  நல்ல விதை அண்ணா.. தொடருங்கள்.

  மறுமொழி
 • 24. ஆழியூரான்  |  6:09 முப இல் ஜூலை 6, 2007

  //அப்படியே, உரமிட்டு மண்ணைக் கற்பழித்த சில விவசாயிகளினையும் சாடிவிடுங்களேன்.//

  சாட வேண்டியது விவசாயிகளை அல்ல. உயிர் கொல்லி பூச்சி மருந்துகளையும், மண்ணை மரணமடைய வைத்த ரசாயண உரங்களையும் விவசாயிகள் யாரும் தயாரிக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு அறிவும் இல்லை. எல்லா வகையிலும் தன்னை நட்டப்படுத்தும் விவசாயத்தை மீட்டெடுக்க ஏதாவது ஒரு கருவி கிடைக்காதா என ஏங்கிகிடந்த விவசாயியின் ஏக்கத்தை பயன்படுத்திக்கொண்ட பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்ளூர் களவாணி முதலாளிகள் உருவாக்கிய நச்சுப்பொருட்கள்தான் ரசாயண உரங்கள். விவசாயிகளின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி அவற்றை தந்திரமாக விற்பனை செய்து வருவதும் அந்த கம்பெனிகளே. எய்தவன் இருக்க அம்பை நோகும் கதையாக ரசாயண உரங்களின் வளர்ச்சிக்கும், அவற்றால் ஏற்பட்ட மண்ணின் நச்சுக்கும் நீங்கள் சாட வேண்டியது அந்த பன்னாட்டு நிறுவனங்களையும், பெரு முதலாளிகளையும்தானே ஒழிய விவசாயிகளை அல்ல.

  –ஆழியூரான்–

  மறுமொழி
 • 25. ப்ரியன்  |  7:45 முப இல் ஜூலை 6, 2007

  /*இலக்கியம் பயனற்றதுண்ணு சொல்ல வர்றீங்களா?*/

  பாமரனைப் பற்றிப் பேசாவிட்டால் இலக்கியம் பயனற்றதுதானே சிறில்…

  மறுமொழி
 • 26. sivagnanamji  |  9:30 முப இல் ஜூலை 6, 2007

  முகத்தில் அறையும் கவிதை

  மறுமொழி
 • 27. ♠யெஸ்.பாலபாரதி♠  |  9:33 முப இல் ஜூலை 6, 2007

  //முகத்தில் அறையும் கவிதை//

  🙂

  வாங்க சிவ்ஜி.. , உங்களைக் காணாமேன்னு பார்த்துகிட்டே இருந்தேன். இப்ப தான் திருப்தியாச்சு. 🙂

  மறுமொழி
 • 28. cyrilalex  |  11:34 முப இல் ஜூலை 6, 2007

  //பாமரனைப் பற்றிப் பேசாவிட்டால் இலக்கியம் பயனற்றதுதானே சிறில்…//

  விவாதத்துக்காக…

  பாமரனைப் பற்றி பேசிவிட்டதாலேயே இலக்கியம் பயனுள்ளதாகிடுமா?

  பாலபாரதியின் இந்தக் கவிதை பசி தீர்க்குமா?
  🙂

  மறுமொழி
 • 29. சைதை முரளி  |  12:11 பிப இல் ஜூலை 12, 2007

  தெனறலாய் வருடி தீயாய் சுட் ட கவிதை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: