சிரங்குகள்

ஜூலை 3, 2007 at 12:50 பிப 10 பின்னூட்டங்கள்

உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்

ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை

களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு

முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!

Advertisements

Entry filed under: கவிதை.

இருப்பு ங்கொய்யால…

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. த.அகிலன்  |  1:02 பிப இல் ஜூலை 3, 2007

    கவிதை சூப்பர் தல. ஆனா எனக்கொரு சந்தேகம சிரங்குகள்/சிறங்குகள் எது சரியான பிரயோகம் நீங்கள் பாவித்திருப்பது தானா?

    மறுமொழி
  • 2. kusumban  |  1:07 பிப இல் ஜூலை 3, 2007

    பால பாரதி அண்ணன் அவர்கள் உடல் நிலை சரி இல்லையாம் அதனால் அவரை நான் பார்க்க போகிறேன், அவருக்கு நீங்க என்ன என்ன கொடுக்க நினைத்தாலும் என்னிடம் கொடுக்கவும்..

    மறுமொழி
  • 3. ♠யெஸ்.பாலபாரதி♠  |  1:15 பிப இல் ஜூலை 3, 2007

    ஹிஹிஹி.. வழக்கம் போல.. என் தப்பு தான். இப்போ சரி பண்ணிட்டேன்.

    மறுமொழி
  • 4. சென்ஷி  |  1:27 பிப இல் ஜூலை 3, 2007

    சரியாப் போச்சுன்னு ஒரு வார்த்தை டைப் பண்ண என்ன செய்யணும்

    மறுமொழி
  • 5. பொன்ஸ்  |  1:31 பிப இல் ஜூலை 3, 2007

    தல, சிறகுகள்னு தமிழ்மணத்தில் படிச்சிட்டு வந்தேன்.. சிரங்குகளா! அதுசரி..

    மறுமொழி
  • 6. panguvaniham  |  1:46 பிப இல் ஜூலை 3, 2007

    இதுல ஏதோ உள்குத்து இருக்குது போலயே….ம்ம்ம்ம்….யாரையோ போட்டு தாக்கற மாதிரி ஒரு தொனி தெரியுதே

    மக்களே இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்…இனி உங்க இஷ்டம் அடிச்சி ஆடுங்க……..ஹி..ஹி…

    பங்காளி…

    மறுமொழி
  • 7. sivagnanamji  |  1:46 பிப இல் ஜூலை 3, 2007

    சிங்கம்,
    மயில்,
    தாமரை,
    சிரங்கு……

    மறுமொழி
  • 8. masivakumar  |  3:56 பிப இல் ஜூலை 3, 2007

    நல்ல படைப்பு. படித்த அடுத்த சில நிமிடங்களுக்கும், இன்னும் பல நாட்களுக்கும் சிந்திக்க வைக்கும் வரிகள்.

    வாழ்த்துக்கள்.

    மா சிவகுமார்

    மறுமொழி
  • 9. உண்மைத் தமிழன்  |  9:43 முப இல் ஜூலை 5, 2007

    நல்லா ரசிக்கிறாப்புலதான் இருக்கு. சிரங்கு புடிச்ச கை சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க..

    எழுதிப் போட்டு 2 நாளாச்சு.. என் கண்ணுக்கு எப்படி படாம இருந்துச்சு..?

    மறுமொழி
  • 10. pandiidurai  |  4:37 பிப இல் ஜூலை 7, 2007

    //சரிபடும் தேகமும், தேசமும்! //

    இங்கு களிம்பு என்பதை கழகம் என்று எடுத்துக் கொள்ளத்தோன்றுது பாலா

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,257 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: