நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!

ஜூன் 16, 2007 at 7:40 முப 31 பின்னூட்டங்கள்

ரஜினி தலையில் கிழிக்கப்பட்ட டிக்கேட்

பொதுவாகவே ரஜினி படங்களில் லாஜிக் பார்ப்பது கிடையாது. கொடுக்கும் காசுக்கு விறுவிறுப்பான ஒரு தமிழ்படம் பார்க்க முடியும். அதுவும் சில வித்தியாசமான மேனரிசங்களை ரசிக்க முடியும் அவ்வளவு தான். சிவாஜி படத்தின் கதையை பலரும் இங்கு அலசி காயப்போட்டு விட்டதால்.. அது பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
படத்தில் எனக்கு ஒவ்வாத காட்சிகளைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

* தமிழ்ச்செல்வி என்று நாமகரம் சூட்டப்பெற்ற நாயகி ஸ்ரேயா எல்லா பாடல்காட்சிகளிலும் மேலாடையின்றி, பாலிவுட் நடிகை மல்லிகாஷெராவத்தை நினைவு படுத்தியபடியே இருந்தார். ஏண்டாப்பா… கோடிகளில் எடுத்ததாக சொல்லிக்கிறாங்களே.. ஸ்ரேயாவுக்கு ஒரு துப்பட்டாவுக்கு கொஞ்சம் சேர்த்து பட்ஜெட் ஒதுக்கக்கூடாதே!

* பழைய படங்களில் வரும் பாடல் காட்சிகளில் ஆடும் நாயகன் காலில் செருப்பு அணிந்திருக்க, நாயகி வெற்றுக்காலுடன் ஆடுவார். அதே போல முதல் பாடலில் நடிகை நயந்தாரா வெற்றுக்காலுடன் ஆடி இருக்கிறார். (ஸ்டார் போட்ட முதல் பாராவில் இருக்கும் கடைசி வரிகளை கொஞ்சம் மாற்றி வாசித்துக்கொள்ளவும்.. ரிபீட்டே)

*அங்கவை-சங்கவை என்று இரண்டு பெண்பாத்திரங்கள். இவர்கள் படத்தின் படி சாலமன் பாப்பையாவின் வாரிசுகள். முகத்தில் கருப்பு சாயம் அடிக்கப்பட்டு.. நகைச்சுவை என்ற பெயரில் ஷங்கர் செய்திருக்கும் வேலையை ரசிக்க முடியவில்லை. கருப்பு நடிகருக்கு சிகப்புச்சாயம் பூசி அழகு பார்த்த ஷங்கரின் அழுக்கு மனம் இங்கேயும் வெளிப்பட்டது.

* கதை நாயகன் கருப்பு ரஜினி கொள்ளை அடித்த வில்லன்களின் கருப்பு பணத்தை வெளுப்பாக்க, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த மக்களை காட்டி தன் அழுக்கு மனதின் மதவெறியையும் காட்டி விட்டார்கள் படக்குழுவினர். நம் நாட்டைப் பொருத்த அளவில் ஹவாலா மாதிரியான காரியங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருவது மார்வாடிகள். அதற்கு பின் குஜராத்திகள், ஜெயின் ஷாக்கள். (இஸ்லாமியர்களின் பங்கு இவர்களை விட குறைவே!)

* பல ஆண்டுகாலமாக பாலியல் உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒரு சமூகம் இப்போது தான் கொஞ்சமேனும் தன் உரிமைகளை மீட்டு எடுத்து வருகிறது. திருநங்கைகள் தொடர்ச்சியாக திரைப்படங்களில் கொச்சை படுத்தப்பட்டு வருகிறார்கள். அதற்கு எதிராக சில குரல்களே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்திலும் கூட..,

ரஜினி வெளிநாட்டில் இருந்து வந்த பின் அவருக்கென பெண்களை கேட்வாக் நடத்தி அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார் விவேக். அப்போது ஒரு பெண்ணை பார்த்து, ‘ஹாய் முன்ஸ்’ என்று அழைப்பார் விவேக். ‘என்னது முன்ஸா..?’ என்று ரஜினி கேட்க, ‘ஆமா.. இவன் முனுசாமி, நம்ம பையன் தான். போன வாரம் தான் அப்ரேசன் செய்துகிட்டான்.’ என்று ஆப்ரேசன் செய்துகொண்ட ஒருவரை ஆண் விகுதியிலேயே அழைப்பார்.

அட! நாதாரிகளா… ஒங்களுக்கு எத்தன தடவை சொன்னாலும் ஏண்டா புரிய மாட்டேங்குது. எப்போதுமே சிறுபான்மையினரையும், விளிம்புநிலை மக்களையும் ஏண்டா இப்படியே காட்டுறீங்க.. நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க!? த்துத்தெரி!!!!

Advertisements

Entry filed under: சமூகம்/ சலிப்பு, சினிமாப் பார்வை.

சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?! நாளை பதிவர்சந்திப்பு: மொக்கை போட வாங்க!!

31 பின்னூட்டங்கள் Add your own

 • 1. நாமக்கல் சிபி  |  7:56 முப இல் ஜூன் 16, 2007

  //ஆமா.. இவன் முனுசாமி, நம்ம பையன் தான். போன வாரம் தான் அப்ரேசன் செய்துகிட்டான்.’ என்று ஆப்ரேசன் செய்துகொண்ட ஒருவரை ஆண் விகுதியிலேயே அழைப்பார்//

  முதல் 15 நிமிடங்கள் தவறு விட்டு விட்டேன்.

  நீங்கள் எழுதியிருப்பது நிஜமெனில் நானும் எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்!

  மறுமொழி
 • 2. கொழுவி  |  8:01 முப இல் ஜூன் 16, 2007

  //நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க!? த்துத்தெரி!!!!//

  உங்களுக்குத் தெரியாதா.. நாங்க மண்சோறு தானே சாப்பிடுறோம்..

  மறுமொழி
 • 3. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  8:14 முப இல் ஜூன் 16, 2007

  எழுத்துப் பிழையை சரி செஞ்சுட்டேன் சிபி!
  நன்றிகள்!!
  பிழையை சுட்டிக்காட்டியமைக்கும், என் கருத்துடன் ஒத்துப்போவதற்கும்!

  மறுமொழி
 • 4. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  8:15 முப இல் ஜூன் 16, 2007

  புது வூட்டுக்கு வந்த கொழுவிக்கு வந்தனங்கள். ஆனாலும் உமக்கு குசும்பு.. 🙂

  மறுமொழி
 • 5. உண்மைத் தமிழன்  |  8:23 முப இல் ஜூன் 16, 2007

  இதையும் சேர்த்துக்கத் தல..

  அரைகுறை ஆடையுடன் எதிரில் நிற்கும் பெண்களெல்லாம் வேண்டாம். தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு இதை பாலோ பண்ற பொண்ணுதான் வேணும்கிறார் ரஜினி.. அப்படி பாலோ பண்ற பொண்ணுதான் டான்ஸ் சீன்ல இந்த அரைகுறைகளைவிட அசிங்கமா நின்னுச்சு.. ஷங்கர் எதை தமிழ்க் கலாச்சாரம், பண்பாடுன்னு சொன்னாருன்னு தெரியல தல..

  மறுமொழி
 • 6. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  9:39 முப இல் ஜூன் 16, 2007

  ஆமாண்டா… அப்படித்தான்!

  59.162.136.130 எண்ணில் இருந்துவந்து, கூட்டி கொடுப்பதாய் சொன்னவருக்கு.., அது உங்க “சொந்தங்கள்” விசயம். எனக்கு இப்போ ஆர்வமில்லை. தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன்.

  மறுமொழி
 • 7. பங்காளி...  |  9:48 முப இல் ஜூன் 16, 2007

  நீங்கள் சுட்டிக்காட்டும் அழுக்குகள் எல்லா மொழிப் படங்களிலும் காலங்காலமாய் நெடுக வருகிற ஒன்றுதான்…..ஆனானப்பட்ட எம்.ஜி.ஆர் படங்களில் இதை விட விகாரமான திணிப்புகளெல்லாம் இருந்திருக்கின்றன…….

  ரஜினி படமென்றால் மட்டும் இத்தனை அசிங்கங்களையும் பட்டியலிட்டு பதிவிட உங்களை உந்துவது எது?….ரஜினி என்ன அந்தளவுக்கு புனிதபிம்பமா?…..ஆசாபாசங்கள் நிறைந்த ஒரு சினிமா வியாபாரி அவ்வளவே!

  முதலில் ரஜினியை நிமிர்ந்து பார்ப்பதை நிறுத்தி பக்கத்து மனிதனாய் பார்த்தல் மிகத்தேவையான ஒன்று.

  மற்றபடி உங்கள் கருத்துக்கள் நியாயமானதும், அவை தவிர்க்கப்பட வேண்டியதும் என ஒப்புக்கொள்கிறேன்.

  மறுமொழி
 • 8. கோ.இராகவன்  |  9:48 முப இல் ஜூன் 16, 2007

  இன்னும் படம் பார்க்கவில்லை. நாளை போகலாம் என்று இருக்கிறேன். படம் பார்த்தால் கருத்து சொல்கிறேன். ஆனாலும் கடைசியாகக் குறிப்பிட்ட செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகமிக. ஷங்கர் மட்டும் தெய்வமா என்ன? எல்லாரும் எவர்சில்வர் தட்டில் சோற்றைப் போட்டால்…இவர் தங்கத் தட்டு..வெள்ளித் தம்ளர், வைர ஸ்பூன்….ஆனா சோறு என்னவோ அதே நஞ்ச சோறுதான்.

  மறுமொழி
 • 9. mkrun  |  9:54 முப இல் ஜூன் 16, 2007

  எல்லா லூசுங்களும் முதல் நாள் படம் பார்க்க போறத, நாமளும் லூசு மாதிரி வேஷம் போட்டு போய் என்ன நடக்குதுன்னு, பார்ப்போம்முனு நீங்கள் முடிவு பண்ணுனது ஒருவிதத்தில் கரெக்ட்டுத்தான். அதுக்காக இன்னுமுமா அந்த வேஷத்தை கலைக்காம இருக்கீங்க., யெஸ்பா…?

  மறுமொழி
 • 10. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  10:00 முப இல் ஜூன் 16, 2007

  மன்னிக்கனும் பங்காளி!

  எவரையும் நிமிர்ந்து பார்க்கும் பழக்கமில்லை எனக்கு. எல்லோரும் சக மனிதர்கள் என்ற பார்வையுடையவன் நான்.

  அதே சமயம்.. எல்லா சகமனிதர்களுக்கும் சில தலைகளை அவரவராக தேர்வு செய்து இருப்பார்கள். அந்த நிலையில் இருப்பவர்களுக்கு சாதாரண மனிதனைவிட சமூக அக்கரையும் ஒழுங்கும் தேவை என்று நம்புகிறவன் நான்.

  ரஜினி மாதிரியான ஆட்கள் சொல்லுவதை அப்படியே கேட்க ஏகப்பட்ட விசிலடிச்சான் குஞ்சுகள் நிறைந்திருக்கும் சமூகத்தில் ஒருக்கப்பட்டவர்கள் மீது இவர்களும் சேறு பூசாமல் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

  தவறு எனில் மன்னிக்க!

  மறுமொழி
 • 11. நாமக்கல் சிபி  |  11:08 முப இல் ஜூன் 16, 2007

  //ரஜினி மாதிரியான ஆட்கள் சொல்லுவதை அப்படியே கேட்க ஏகப்பட்ட விசிலடிச்சான் குஞ்சுகள் நிறைந்திருக்கும் சமூகத்தில் ஒருக்கப்பட்டவர்கள் மீது இவர்களும் சேறு பூசாமல் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு//

  அதே விசிலடிச்சான் குஞ்சு ஒன்றுதான் உங்கள் கருத்தோடு ஒத்துப் போவதாய்ச் சொல்லியிருக்கிறது என்பதையும் நீங்கள் உணரவேண்டும் பாபா!

  மறுமொழி
 • 12. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  11:15 முப இல் ஜூன் 16, 2007

  அட! அப்படியா.. நல்லது தல… !
  உணர்ந்தேன். 🙂

  மறுமொழி
 • 13. லக்கிலுக்  |  11:46 முப இல் ஜூன் 16, 2007

  அண்ணே!

  சிவாஜி வெறும் திரைப்படம். தமிழ்த் திரைப்படங்களுக்கேயுரிய கேடுகெட்ட இலக்கணங்களுடன் கூடிய படம். நீங்க என்னென்னவோ ஒரு தமிழ்ப்படத்தில் எதிர்பார்க்கறீங்க. தசாவாதரம் படத்துக்கும் உங்கள் விமர்சனம் இப்படியே அமையும் என்று எதிர்ப்பார்க்கிறேன். 🙂

  மறுமொழி
 • 14. Appu  |  4:54 பிப இல் ஜூன் 16, 2007

  dei Aliii bash panninaa unakky een kadukkuthu? neeyum OMPOTHAAa??

  thoooooooo

  மறுமொழி
 • 15. பிரபு ராஜதுரை  |  5:07 பிப இல் ஜூன் 16, 2007

  “”பழைய படங்களில் வரும் பாடல் காட்சிகளில் ஆடும் நாயகன் காலில் செருப்பு அணிந்திருக்க, நாயகி வெற்றுக்காலுடன் ஆடுவார””

  ல்லாப் பனிமலைகளிலும் கதாநாயகன் கைக்கு கிளவுஸ் முதற்கொண்டு அணிந்திருக்க, கதாநாயகி அரை டவுசர் அல்லது இடுப்பு தெரிய சேலையோடுதானே வருகிறார்கள்!

  பாலபாரதி,

  பார்க்கிறதையும் பார்த்துட்டு இப்படி கதாநாயகியை உரித்து விட்டிருக்கிறார்கள் என்று புலம்பக்கூடாது.

  மறுமொழி
 • 16. சந்தோஷ்  |  10:40 பிப இல் ஜூன் 16, 2007

  பாலா, நீங்க சொல்லி இருப்பது மிகவும் சரி அதுவும் இதில் நகைச்சுவை என்ற பெயரில் மிக்ககேவலமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். படம் செம குப்பை இந்த குப்பையை கிளர இவனுங்களுக்கு 2 வருசம் ஆச்சா?

  மறுமொழி
 • 17. Top Posts « WordPress.com  |  12:00 முப இல் ஜூன் 17, 2007

  […] நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீ… [image] […]

  மறுமொழி
 • 18. தமிழன்பன்  |  2:41 முப இல் ஜூன் 17, 2007

  பார்ப்பனர்களும் பாதிப்பார்ப்பனர்களும் அடிக்கும் கூத்துத்தான் பெரும்பாலான தமிழ்ப்படங்கள்.அதிலே நாய் விற்ற காசு குறைக்காது என்பதும் மடையர்கள் எதையும் பார்ப்பார்கள் என்பதும் அவர்கள் பணம் பன்னுவது மட்டுமன்றித் தமிழர்களை,தமிழைக் குறை படுத்துவதை ஒரு நாகரீகமான ச் செயலாக்கி பிழைப்பு செய்கிறார்கள்.
  அரசியல் கலக்காதத் தமிழுணர்வை வளர்ப்பதே இதற்கெல்லாம் முடிவு காலம்.அதற்கு முதலில் உண்மைத் தமிழுணர்வாளர்கள் தமிழ் வளர்க்க தங்கள்,தங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஆரம்பிப்பதுதான் ஒரே வழி.

  மறுமொழி
 • 19. பேர் எதுக்கு?  |  4:55 முப இல் ஜூன் 17, 2007

  தமிழ் நாட்டிலே எத்தனை மார்வாடிகள், குஜராத்திகள் ஹவாலா தொழில் பண்ணூறாங்க பாலபாரதி சார்?

  அதுவுமில்லாம வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களிடமும் கேட்டு பாருங்கள். கீழக்கரை இஸ்லாமியர்கள் தான் ஹவாலா தொழில் செய்கிறார்கள். அதில் தவறு இல்லை என்றும் வாதாடுகிறார்கள்.

  எல்லாவற்றிலும் குறுகிய கண்ணோடு பார்த்தால் அப்படி தான். என்ன செய்வது?

  மறுமொழி
 • 20. கட்டியக்காரன்  |  6:09 முப இல் ஜூன் 17, 2007

  கச்சிதமான விமர்சனம். இந்த ஷங்கர் – சுஜாதா கூட்டணி இருக்கிறதே, அது ஒரு திருந்தாத கூட்டணி. தலித்துகளும் பிராமணர்களும் ஒரே மாதிரி நிலையில் இருக்கிறார்கள் என்று ஒரு முறை எழுதினார் சுஜாதா.

  மறுமொழி
 • 21. லிவிங் ஸ்மைல்  |  4:57 முப இல் ஜூன் 18, 2007

  ////// ரஜினி வெளிநாட்டில் இருந்து வந்த பின் அவருக்கென பெண்களை கேட்வாக் நடத்தி அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார் விவேக். அப்போது ஒரு பெண்ணை பார்த்து, ‘ஹாய் முன்ஸ்’ என்று அழைப்பார் விவேக். ‘என்னது முன்ஸா..?’ என்று ரஜினி கேட்க, ‘ஆமா.. இவன் முனுசாமி, நம்ம பையன் தான். போன வாரம் தான் அப்ரேசன் செய்துகிட்டான்.’ என்று ஆப்ரேசன் செய்துகொண்ட ஒருவரை ஆண் விகுதியிலேயே அழைப்பார்.
  அட! நாதாரிகளா… ஒங்களுக்கு எத்தன தடவை சொன்னாலும் ஏண்டா புரிய மாட்டேங்குது. எப்போதுமே சிறுபான்மையினரையும், விளிம்புநிலை மக்களையும் ஏண்டா இப்படியே காட்டுறீங்க.. நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க!? த்துத்தெரி!!!! /////
  அந்த டாபருங்க கதை இருக்கட்டும், எத்தனையோ பேர் சிவாஜி கதையை வலையில், அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து மேய்ந்து கொண்டு இருக்க..
  விளிம்புகளின் மீதான சங்கர்-ரஜினி டாபர்களின் திரைஅவமதிப்புக்களை சுட்டிக்காட்டிய நண்பர் யெஸ்.பாவிற்கு நன்றிகள் பல!!
  பணம் படைச்சவங்க என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல!! கண்டிப்பா ஒருநாள் பதில் சொல்லவைப்போம்!!!
  நன்றி!!!

  மறுமொழி
 • 22. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  6:33 முப இல் ஜூன் 18, 2007

  //14. Appu | June 16th, 2007 at 4:54 pm
  dei Aliii bash panninaa unakky een kadukkuthu? neeyum OMPOTHAAa??

  thoooooooo//

  அன்பில்லா அப்பு!
  உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. 😦

  மறுமொழி
 • 23. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  6:38 முப இல் ஜூன் 18, 2007

  //19. பேர் எதுக்கு? | June 17th, 2007 at 4:55 am
  தமிழ் நாட்டிலே எத்தனை மார்வாடிகள், குஜராத்திகள் ஹவாலா தொழில் பண்ணூறாங்க பாலபாரதி சார்?

  அதுவுமில்லாம வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களிடமும் கேட்டு பாருங்கள். கீழக்கரை இஸ்லாமியர்கள் தான் ஹவாலா தொழில் செய்கிறார்கள். அதில் தவறு இல்லை என்றும் வாதாடுகிறார்கள்.

  எல்லாவற்றிலும் குறுகிய கண்ணோடு பார்த்தால் அப்படி தான். என்ன செய்வது?
  //

  அய்யா பேர் சொல்லாத பெருமாளே!
  இஸ்லாமியர்கள் ஹவாலாவில் ஈடுபடவே இல்லை என்பது என் கருத்து அல்ல. மாறாக அதிகம் அதில் கொழிக்கும் மார்வாடிகள் போன்றோரை ஏன் காட்டவில்லை என்பதே என் கேள்வி!

  பெயரோடு வாருங்கள்.. திருட்டுத்தனங்களிலும், ஹவாலாக்களிலும் ஈடுபட்டிருக்கும் பெருன்பான்மை மதத்தினரை நான் காட்டுகிறேன்.
  அப்படியான பணம் இங்கே இந்துமதவெறியர்களுக்கு நன்கொடையாக மாறிவருவதையும் என்னால் காட்ட முடியும்.

  என்ன செய்றது.. எல்லாவற்றிலும் குறுகிய கண்ணோடு பார்த்தால் அப்படி தான். என்ன செய்வது?
  🙂

  மறுமொழி
 • 24. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  6:40 முப இல் ஜூன் 18, 2007

  /பார்க்கிறதையும் பார்த்துட்டு இப்படி கதாநாயகியை உரித்து விட்டிருக்கிறார்கள் என்று புலம்பக்கூடாது.//

  வணக்கம் வக்கீலண்ணே!
  பார்க்காம சொன்னா வாதம் எடுபடாதுங்களே! சாட்சி சரியா இருக்கனுமே! :)))

  மறுமொழி
 • 25. லக்கிலுக்  |  6:43 முப இல் ஜூன் 18, 2007

  உங்கள் டெம்ப்ளேட்டில் இணைத்திருக்கும் தமிழ்வெளி லோகோ சூப்பர்!

  மறுமொழி
 • 26. Thooya  |  10:28 முப இல் ஜூன் 25, 2007

  புது வீடு நல்லாயிருக்கு பாலண்ணா..:)

  மறுமொழி
 • 27. ayanulagam  |  9:33 முப இல் ஜூலை 3, 2007

  நானும் அந்த அசிங்கத்தை ரொம்பவே செலவழிச்சு பார்த்தேன். அதுல என் மனதை அதிகம் நெருடினது பழகி பார்க்குறேன்னு போய் கருப்பை கிண்டல் பண்ணதுதான்.

  அதுவும் இல்லாமல் இன்னும் நிறைய குறைகள் இருக்கிறது

  1. 2006ல் ரஜினியை FERA சட்டத்தின்கீழ் கைது செய்து இருப்பார்கள். FERA போய் FEMA வந்துட்டுது இன்னும் அது பற்றி சொல்லாமல் இறுதியில் 2015ம் ஆண்டு இந்தியா G10ல் இணைய வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்னு எழுதுறது சுத்த அபத்தம். இதுக்குத்தானா இத்தனை கோடி.

  2. இசைக்கருவிக் கடையில் சண்டையின் போது ஒரு பெரிய வயலினில் வில்லனை ஏற்றி ஏற்றி இறக்கும்போது இசை அதற்கு ஏதுவாய் நேர்மாறாக கொடுத்தது…

  3. உலகமே அஹிம்சையைப் பற்றி சிந்திக்கும்போது இன்னும் அடிதடிதான் வேலைசெய்யும் என்பது மாதிரி காட்சி அமைத்தது…

  நானும் உங்ககூட சேர்ந்து என்னோட கண்டனத்தைப் பதிஞ்சிடறேன்.

  மறுமொழி
 • 28. Rasikow Gnaniyar  |  3:27 பிப இல் ஜூலை 5, 2007

  கோபம் மிகவும் நியாமானது பாலபாரதி

  மறுமொழி
 • 29. pandiidurai  |  4:52 பிப இல் ஜூலை 7, 2007

  பைத்தியகாரபுள்ளக இருக்குற வரைக்கும் சிவாஜிக்கு அப்புறம் ஏம்பா பாலா எம் ஜி. ஆர் வர போகுதாமே அதையும் பார்ப்பாங்க . என்ன ரஜினிக்கு இது கொஞ்சம் ஓவர்தான். ஆசிரம் பள்ளிக்குடத்தில முதலில் அமல்படுத்த சொல்லுங்க அப்பா. படத்துல ரஜினி சங்கரு சுஜாதா ஏஆர் ரகுமானு கே.வி.ஆனந்து விவேக்கு இருந்தும் ரஜினிக்கு வடிவேலுவோட கமெடி டயலாக்கு தேவபடுதே (அங்கதான் மதுரை கார பய வடிவேலு நிக்கிறான்) . வயசாகிபோச்சுள்ள அதான் ரசிகபெருமக்களுக்கு மொட்டை அடிகிறாருங்க. அப்பதானே மசிரு வலரும்.

  மறுமொழி
 • 30. K.R.Athiyaman  |  2:12 பிப இல் ஜூலை 10, 2007

  Hawla business is a “kaalathin Kattayam” ;
  over taxation and foreign exchange controls created
  tax evasion and black money, which needed to be exported abroad and laundered ad be brought back to India..

  money generated thru criminal activities is very less,
  when compared to tax evading black moeny..

  As long as tax rates are deemed unfair, such hawala cannot be curbed. The kural “Malarailindhu vandu thenai edupathu pola..” refers to the least rate of taxation which doesn’t hurt the tax payer…

  And all sort of groups and clans are into this business.
  and Tamils from hinterland (from my area of Karur dt) are
  into kandhu vatti business all over India. highest rate of interest. (due to high inflation and deficts)… so ?

  sorry for this english

  Athiyaman
  Chennai
  athiyaman.blogspot.com

  மறுமொழி
 • 31. Arun Kamal  |  5:11 முப இல் ஜூலை 19, 2007

  dear Bala,
  (Neengal cine kavignar Balabarathi???) idharkku, Kumudam-il vandha vimarsanam le…saai thottu kaattum. (Kaadhila Poo Suttrugiraargal. Aanaal, theatre-ai vittu vandha pinbu thaan ‘Kadhila poo’ enbathu uraikkirathu…) Idhuthaan ungal vimarsanam padithathum thondriyathu. (Ungalai cinema moolam adaiyaala padutha ninaikka villai. En thelivirkkaaga mattumae kaettaen)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: