சென்னையில் உலா வரும் போலி டாக்டர்கள்?!

ஜூன் 12, 2007 at 7:44 முப 30 பின்னூட்டங்கள்

இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு பட்ட பிணிகளினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பணம் படைத்தவர் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளுக்கு கூட சில பணக்கார வியாதிகள் வந்த வண்ணமிருக்கின்றன. அரசாங்க மருத்துவ மணைகளில் போதிய வசதியின்மை, நோய் கண்டவர்களை கீழ்த்தரமாக நடத்தும் முறை, தங்களின் சொந்த மருத்துவமணைக்கு நோயாளிகளை திசை திருப்பும் மருத்துவர்கள் என்று ஏகப்பட்ட சார்புடைய கருத்துக்களை வைக்க முடியும்.

அரசாங்க மருத்துவமணைகளின் நிலை இதுவெனில் தனியார் மருத்துவமணைகளின் செயல் பாடுகள் குறித்து சொல்லவே வேண்டாம்.

சாதாரண காய்ச்சல் என்று போகிறவன் கூட.. ஆத்தா தாலியையோ, பொண்டாட்டியின் தாலியையோ அடகு வைத்து அல்லது விற்று தான் வீடு திரும்ப வேண்டி இருக்கிறது. (இங்கு ‘தாலி’ என்பதை பொன் என்று கொள்க)

விளைவு…

தெருவுக்கு ஒரு டாக்டர் முளைக்கிறார். (இவர்களில் 99.9% பேர் போலி மருத்துவர்கள்.) தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று எந்த விசயத்துக்கும் வெறும் இருபது முதல் முப்பது ரூபாய் தான் வாங்குகிறார். வண்ண வண்ணமான மாத்திரைகளை அவரே கொடுக்கிறார். தனியாக மருந்துச்செலவும் கிடையாது. ஏழைகளின் கூட்டம் அலை மோதுகிறது.

நகரங்களின் தெருவுக்கொரு டாக்டர் என்று வருபவர்கள் அனேகம் பேர் தங்களை சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். கிராமப் புரங்களில் தங்களை நேரடியாக எம்.பி.பி.எஸ் என்றே கூறி வருவதை நாம் செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

பள்ளியின் இறுதியாண்டைக்கூட முடிக்காத இவர்களில் பலர் நிஜ மருத்துவர்களிடம் உதவியாளராக சேருகின்றனர். சில ஆண்டுகளில் ஊசி போட, கோழி கிறுக்கலான எழுத்தை உணர்ந்துகொள்ள என்று பயிற்சி எடுத்த பின் தனியாக டாக்டர் ஆகின்றார்கள்.

ஏதோவொரு நோய்க்கு மருத்துவரைப் பார்த்து அவர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுடன் மருந்துக் கடையை அணுகினால்.. சீட்டை பார்த்து விட்டு கடைக்காரர் நம்மிடம் கேட்பார் ‘என்ன செய்யுது?’, நாமும் டாக்டரிடம் சொல்லிய அதே விசயத்தத இவரிடம் சொல்லுவோம்.

நாம் சொல்லும் நோயின் தன்மைக்கும் மருத்துவர் எழுதிகொடுத்திருக்கும் கிறுக்கல் எழுத்தின் முதல் எழுத்தைக்கொண்டு நமக்கு தேவையான மருந்தை எழுத்துத் தருவார் கடைக்காரர். (டி.பார்ம்- படித்தவர்கள் தான் ம்ருந்துகடை வைத்திருக்கலாம் என்பது சட்டம். ஆனால்.. அந்த டி.பார்ம்-கள் கையெழுத்து மட்டும் கொண்டு பல மருந்துகடைகள் நடந்து வருகிறது)

மூலம், பௌவுத்ரம், விரை வீக்கம், ஆண்மைக்குறைவா எங்களிடம் வாங்க என்று தமிழகம் முழுவதும் மஞ்சல், சிகப்பு, ரோஸ் என்று ஒற்றை வண்ணத்தில் சுவர்களில் ஒட்டப்பட்ட பல போஸ்டர்களை நம்மிள் பலரும் பார்த்திருக்கலாம்.

நான் அப்படிப் பார்த்த இரு போஸ்டர்கள் என் கவனத்தை ஈர்த்தது. காரணம்… இரண்டு போஸ்டர்களும் வெவ்வேறு மருத்துவர்களுடையது. ஆனால் இருவரும் பதிவு எண்களாக ஒரே எண்ணை(கொல்கத்தா அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்) கொடுத்திருந்தது குழப்பியது.

விசயத்தை பத்திரிக்கை நண்பர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறேன். விரைவில் போலி டாக்டர் செய்தியும், சோதனையும் தமிழகமெங்கும் நடக்கலாம்.

🙂

Advertisements

Entry filed under: சமூகம்/ சலிப்பு, தகவல்கள்.

பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்? நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?!

30 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  7:51 முப இல் ஜூன் 12, 2007

  உண்மைத் தமிழன் ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன். அன்னார் மன்னிப்பாராக!

  :)))))

  மறுமொழி
 • 2. வெயிலான்  |  7:59 முப இல் ஜூன் 12, 2007

  |||||||||| விரைவில் போலி டாக்டர் செய்தியும், சோதனையும் தமிழகமெங்கும் நடக்கலாம் |||||||||||||

  நடந்தால் நல்லது.

  நீங்கள் போட்டிருக்கும் படங்களை வைத்து வலை நண்பர்கள் நிறைய கலாய்ப்பார்கள் என எண்ணுகிறேன்.

  மறுமொழி
 • 3. துளசி கோபால்  |  8:08 முப இல் ஜூன் 12, 2007

  அப்ப எங்கிட்டே இருக்கும் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக்கிட்டு அங்கே வந்துறவா?

  போஸ்டர் எங்கே அடிக்கிறாங்கன்னு கவனிச்சு வையுங்க. இல்லேன்னா அதே பதிவெண் போதும்.

  மக்கள் உயிருக்கு மதிப்பும் இல்லை விலையும் இல்லை (-:

  மறுமொழி
 • 4. கோவி.கண்ணன்  |  8:12 முப இல் ஜூன் 12, 2007

  எலிக்குட்டி சோதனையில் போலி டாக்டரை கண்டுபிடிக்க முடியாதா ?

  மறுமொழி
 • 5. sivagnanamji  |  8:13 முப இல் ஜூன் 12, 2007

  எங்கும் எதிலும் போலிகள்
  எடுத்துச் சொன்னாலும்
  எவரும் கேட்பதில்லை.
  என்ன ஒரு ‘ரெய்ட்’ இருக்கும்..
  சிலரின் பைகள் நிறையும்………

  மறுமொழி
 • 6. கோவி.கண்ணன்  |  8:15 முப இல் ஜூன் 12, 2007

  //இரண்டு போஸ்டர்களும் வெவ்வேறு மருத்துவர்களுடையது. ஆனால் இருவரும் பதிவு எண்களாக ஒரே எண்ணை(கொல்கத்தா அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்) கொடுத்திருந்தது குழப்பியது.

  விசயத்தை பத்திரிக்கை நண்பர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறேன். விரைவில் போலி டாக்டர் செய்தியும், சோதனையும் தமிழகமெங்கும் நடக்கலாம்.
  //
  இது பேரு ஆபரேசன் போலி(யோ) டாக்டர் ?

  மறுமொழி
 • 7. உண்மைத்தமிழன்  |  8:28 முப இல் ஜூன் 12, 2007

  அடப்பாவமே.. எனக்கு முன்னாடி பழம் தின்னு கொட்டை போட்ட பலசாலிகள் நிறைய பேர் எழுதித் தள்ளிருக்காகளே.. படிக்கலையா ராசா..? இப்ப எனக்கு இருக்குற பிரச்சினையே பத்தலைன்னு புதுசா நீங்க தள்ளி விடுற ‘அல்வா’வா இது? நல்லாயிருங்க சாமி..

  படிச்சேன் தலை.. நமக்குத் தோணாமப் போயிருச்சேன்னு இப்ப வருத்தமாயிருக்கு..

  முதல் காரணம் மக்களின் மருத்துவம் சார்ந்த அறிவுகள் இன்றைக்கு சிதறிப் போய் இருப்பதுதான்..

  ஒருவருக்கு அலோபதி பிடிக்கிறது. இன்னொருவருக்கு ஹோமியோபதி.. மற்றொருவருக்கு சித்த மருத்துவம் பிடிக்கிறது.. இப்படி ஒரே தெருவில் வசிப்பவர்கள் பலரும் பலவிதமான எண்ணங்களுடன் இருப்பதால்தான் இந்த மாதிரி சித்தம் கலந்த சித்த மருத்துவர்கள் எளிதாக மக்களிடம் கலக்கிறார்கள்.

  மருத்துவர்கள் என்றால் ஊசி போடுவார்கள் என்பதுதான் எனது இளமைப் பிராய எண்ணம். ஊசி போடாமலேயே மருத்துவம் என்பதற்கும் அரசு அங்கீகாரம் இருக்கிறது என்பது பின்புதான் தெரிய வந்தது.

  நோட்டீஸ்களைப் பார்த்து மக்கள் ஏமாறுவது கண்டிப்பாக அவர்களது அறியாமைதான். அவர்கள் முறையாகப் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அலோபதி என்றால் பரவாயில்லை. எளிது. ஆனால் ஹோமியோபதி, சித்தா, யுனானி – இவையெல்லாம் மருந்துகளின் அடிப்படையில் கொடுக்கப்படும் மருத்துவம். நான்கைந்து மருந்து பாட்டில்களை வைத்துக் கொண்டு கடையைத் திறந்தால் போதும்.. கல்லா கட்டிவிடும்.

  இதைத் தடுக்க வேண்டியது அரசுகள்தான். வேண்டாம். அவர்களைப் பற்றிச் சொன்னால் நீங்களே என்னைப் பாடுவீர்கள். முதலில் இது போன்ற கிளினீக் வைப்பதற்கு முறைப்படி மருத்துவ இயக்குநரகம் மூலமாக லைசென்ஸ் கொடுக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்.

  பாரத்தை நிரப்பி பணத்தைக் கட்டிவிட்டால் நகரங்களில் போதும். மாநகராட்சிகள் இடம் கிடைக்கும். கிராமங்களில்.. ஒரு போர்டுகூட மாட்டாமல் சிகிச்சைகள் தொடர்கின்றன. மக்களின் அறியாமையும் நம்பிக்கையும், பக்கத்துல இருக்காருல்லே.. என்று விரைவாக பார்த்துக் கொண்டு செல்வதிலும்தான் தொடர்கிறது இந்த போலி மருத்துவர்களின் வாழ்க்கை. யார் தடுப்பது?

  ஒரு சமயம் ரெய்டுகள் நடந்தன. கைதுகள் தொடர்ந்தன. வழக்குகள் அப்படியேதான் இருக்கின்றன. பிணையில் வெளியில் வந்தவர்கள் வேறொரு இடத்தில் தங்களது கிளையைத் தொடங்கிவிட்டார்கள். மக்களாக மாறினால் ஒழிய எஇந்த ‘போலி’களையும் ஒழிக்க முடியாது போலிருக்கு தல..

  நான் வேறென்ன சொல்ல..?

  மறுமொழி
 • 8. தங்கவேல்  |  8:34 முப இல் ஜூன் 12, 2007

  பாலா,

  இந்த போலி டாக்டர்கள் விவகாரம் சிக்கல்களுடையது. புலனாய்வு செய்தால் இவ்விசயம் குறித்து மேலும் பல பரிமாணத் தகவல்கள் வரும். நீங்கள் மிக மேலோட்டமாக எழுதியுள்ளீர்கள் (மொக்கை!?)

  பசிக்கிறது. சாப்பிட்டு வந்து தெம்பாகச் சில தகவல்கள், இத்துறை சார்ந்தவன் என்ற ரீதியில், சொல்கிறேன். (யாரும் போலி டாக்டர் துறையைச் சார்ந்தவன் என்று நினைச்சிராதீங்கடே – ஆசிப் மீரான் ஸ்டைல்)

  மறுமொழி
 • 9. மின்னுது மின்னல்  |  8:56 முப இல் ஜூன் 12, 2007

  இந்த போலி டாக்டர்கள் பற்றிய செய்தி குறிப்பாக (கொல்கத்தா அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் தினத்தந்தியில் 20 அல்லது 30 நாளைக்கு முன்பு வந்தது
  கொத்தனாருக்கு கூட டாக்டர் சட்டிபிகெட் குடுத்தது உள்பட அரசு இதன் பிறகு விழித்து கொண்டதாக தெரியவில்லை

  மறுமொழி
 • 10. மின்னுது மின்னல்  |  9:02 முப இல் ஜூன் 12, 2007

  விடுபட்டவை

  போலி பல்கலைகழகம் வைத்து நடத்தியது கண்டுபிடிக்க பட்டது

  ரூபாய் 30000 குடுத்து MBBS வாங்கியதாக கொத்தனார் சொன்னது உள்பட்

  ஹும் பேசாம டாக்டராயிருக்கலாம்

  மறுமொழி
 • 11. பொன்ஸ்  |  9:08 முப இல் ஜூன் 12, 2007

  பாலா,
  அந்த நம்பரைக் குறிச்சு வச்சிகிட்டீங்களா? அடுத்து நீங்க ஒரு க்ளினிக் தொடங்கும்போது உதவுமே!

  மறுமொழி
 • 12. ravidreams  |  9:13 முப இல் ஜூன் 12, 2007

  kal, cal வெவ்வேறு அரசுப் பதிவுகள் இல்லையா 🙂


  dasboard-options-reading-syndication feeds-for each article, show-full text என்று மாற்றித் தந்தால் கூகுள் ரீடர் போன்றவற்றில் இருந்து உங்கள் முழு இடுகையையும் வாசிக்க வசதியாக இருக்கமே?

  மறுமொழி
 • 13. venkatramanan  |  11:03 முப இல் ஜூன் 12, 2007

  பாலா!
  தயவு செஞ்சு உங்க RSS xml formatஐ complete postக்கு மாத்தி வையுங்க. ப்ளீஸ்.
  பாதி போஸ்டை Feed readerல படிச்சுட்டு மீதிக்கு வலைப்பதிவுக்கு வருவாங்கன்னு நினைச்சீங்கன்னா, அமித் அகர்வாலோட பதிவைப் படிங்க.(http://labnol.blogspot.com/2006/12/do-you-publish-full-text-feeds-or.html)

  என்றும் அன்புடன்
  வெங்கட்ரமணன்.

  மறுமொழி
 • 14. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  12:08 பிப இல் ஜூன் 12, 2007

  ravi, ventraman now DONE! 🙂

  மறுமொழி
 • 15. Cowey  |  1:26 பிப இல் ஜூன் 12, 2007

  arumai bala. junior vikatan padicha thirupthi.

  மறுமொழி
 • 16. venkatramanan  |  4:10 பிப இல் ஜூன் 12, 2007

  பாலா

  உடனடி நடவடிக்கைக்கு நன்றி.
  ஆனா இன்னும் என்னால் முழுப்பதிவையும் பார்க்க முடியலை. ரவிக்கு என்ன ஆச்சுனு சொன்னா நல்லா இருக்கும்!

  என்றும் அன்புடன்
  வெங்கட்ரமணன்

  மறுமொழி
 • 17. Sathia  |  8:28 பிப இல் ஜூன் 12, 2007

  எப்படித்தான் கண்டுபிடிச்சோங்களோன்னு இருக்கு. சமீபத்தில கல்கத்தாவில் தலமையகம் இருக்குன்னு மதுரைல போலி டாக்டர் பட்டம் தர்றதா ரிப்போட்டர்ல படிச்சேன். இவங்க அங்க தான் வாங்கி இருப்பாங்களோ?

  வெங்கடரமணன்,பாலா
  இன்னும் முழுசா வரலை. பாதி தான் வருது.

  மறுமொழி
 • 18. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  5:39 முப இல் ஜூன் 13, 2007

  வெங்கட், சத்தியா… நான் தொழிற்நுட்ப அறிவு இல்லாத ஆள்… ரவிசங்கர் சொன்னது மாதிரி சரி செய்து விட்டேன். இன்னமும் ரீடர் மாதிரியானவற்றில் படிக்க வரலைனா… எனக்கு ஒன்னும் தெரியாது. 😦
  யாராவது… சரியான வழியை சொல்லிக்கொடுத்தால் அதன் படியே மாற்றங்களை செய்து விடுவேன்.

  மறுமொழி
 • 19. venkatramanan  |  6:11 முப இல் ஜூன் 13, 2007

  பாலா!
  Great! இப்ப முழுசா வருது!

  என்றும் அன்புடன்
  வெங்கட்ரமணன்

  மறுமொழி
 • 20. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  6:16 முப இல் ஜூன் 13, 2007

  அப்பாடா… தகவலுக்கு நன்றி தல..!

  நான் வேர்ட்ப்ரஸுக்கு புதுசு.. அதனால பழகிய ப்ளாகர் மாதிரி இதுல விளையாட முடியலை. 😦

  ஆனா… போகப்போக சரியாகிடும்னு நெனைக்கேன். 🙂

  மறுமொழி
 • 21. ப்ரியன்  |  6:33 முப இல் ஜூன் 13, 2007

  மக்களிடம் போலி டாக்டர்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவது மிகவும் அவசியம்…

  இந்த போலிகளின் முக்கிய முகாமே கிராமங்களும் கிராமம் சார்ந்த இடங்களும்தான்…

  மறுமொழி
 • 22. ப்ரியன்  |  6:40 முப இல் ஜூன் 13, 2007

  மீடியாக்களும் இதில் பங்காற்ற வேண்டும்…

  1.) காலங்காத்தாலே – தம்பி தாத்தா கிட்டே வாப்பா…ஏண்டா நாய்களா தமிழ்நாடு பெண்களின் வாழ்க்கையை கெடுக்கிறீங்கன்னு வரவேற்பறையில் பேசும் டாக்டர்களை காசு போனாலும் பரவாயில்லைன்னு மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் – செய்வார்களா?

  2.)அமிதாப் ஆட்டுசூப் குடித்தார் , ஐஸும் அபிசேக்கும் தேனிலவு கொண்டாடினார்கள்,ரஜினி பீவர் என்று அறிவுபூர்வமான தகவல்களை விட்டு மக்களிடம் இவற்றை எடுத்து செல்லவேண்டும்.

  செய்வார்களா?ம்ம்ம் 😦

  மறுமொழி
 • 23. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  9:57 முப இல் ஜூன் 14, 2007

  மன்னிக்க வேண்டும் நண்பர்களே!
  விசாரித்துப் பார்த்தத்தில் அந்த மருத்துவரின் உண்மையான பெயர் “சிக்தார் அரவிந்தா” என்பது தெரிய வந்திருக்கிறது.
  இரண்டு இடங்களில் க்ளினிக் வைத்திருக்கிறார். அதனால் தனித்தனி பெயர்களில் விளம்பரம் செய்து மக்களை ஈர்க்க நினைத்தாராம்.
  ஒரே நபர் தன் இரண்டு பெயர்களை பயன்படுத்தி வலம் வந்திருக்கிறார். இப்படி உலா வருவது சரியா? தவறா? அதுவும் வெவ்வேறு இடங்களில் எப்படி சரியான சமயத்தில் இயங்க முடியும் என்பதையும் அந்த பத்திரிக்கை நண்பர் தான் சட்டத்தின் வழியாகவும், இன்னும் தீர விசாரித்தும் முடிவு செய்ய வேண்டும்.

  மறுமொழி
 • 24. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  12:52 பிப இல் ஜூன் 14, 2007

  ரவி இந்த சொன்ன படி , இந்த பதிவை எடிட் செய்திருக்கிறேன். அவருக்கு நன்றி!!

  மறுமொழி
 • 25. ஜீ  |  2:13 பிப இல் ஜூன் 14, 2007

  //1. ♠ யெஸ்.பாலபாரதி ♠ | June 12th, 2007 at 7:51 am
  உண்மைத் தமிழன் ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன். அன்னார் மன்னிப்பாராக!

  :))))) //

  //
  தங்கவேல் | June 12th, 2007 at 8:34 am
  நீங்கள் மிக மேலோட்டமாக எழுதியுள்ளீர்கள் (மொக்கை!?) //
  :))))))))))))))))))))))))))))))))))))))

  மறுமொழி
 • 26. வெயிலான்  |  2:46 பிப இல் ஜூன் 14, 2007

  //// இரண்டு இடங்களில் க்ளினிக் வைத்திருக்கிறார் ////

  இரண்டு இடங்களின் பார்க்கும் நேரம் ஒரே மாதிரி உள்ளதே! அது எப்படி ?

  மறுமொழி
 • 27. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  5:46 முப இல் ஜூன் 15, 2007

  ஜி.. என்ன பெரிய சிரிப்பு வேண்டி இருக்குன்னு கேக்கேன். இப்படி சிரிச்சா.. ஏதோ உள்குத்து மாதிரியில்ல தெரியுது. ;))))

  மறுமொழி
 • 28. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  5:48 முப இல் ஜூன் 15, 2007

  தோழர் வெயிலான், உங்கள் சந்தேகமும் சரியானதே! அந்த பத்திரிக்கை நண்பர் ஒரு க்ளினிக் மட்டுமே போய் பார்த்துவிட்டு தகவல் சொன்னார். இன்னொரு இடத்தையும் பார்த்தாரெனில்.. 🙂 …. ஏதாவது நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது.

  மறுமொழி
 • 29. லக்கிலுக்  |  6:45 முப இல் ஜூன் 18, 2007

  உண்மைத்தமிழனின் பின்னூட்டம் பார்த்து நொந்துப் போனேன். அவர் அதை தனிப்பதிவாக இட்டிருக்கலாம். இப்போதெல்லாம் பின்னூட்டங்களை படிக்கவே நேரம் அதிகம் எடுத்துக் கொள்கிறது.

  மறுமொழி
 • 30. லக்கிலுக்  |  6:46 முப இல் ஜூன் 18, 2007

  சொல்ல மறந்துட்டேனே? உங்கள் டெம்ப்ளேட்டில் இணைத்திருக்கும் தமிழ்வெளி லோகோ அட்டகாசமாக இருக்கிறது. அதை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர் யாரோ? எவரோ? அவருக்கு என் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,356 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

Feeds


%d bloggers like this: