கோவை சந்திப்பு – சில துளிகள்

மே 22, 2007 at 7:37 முப 11 பின்னூட்டங்கள்

ஞாயிற்றுக்கிழமை கோவை பட்டறைக்கு சனிக்கிழமையே போய் சேர்ந்து விட்டேன். போன பிறகு தான் தெரிந்தது. வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே ஓசை அரஸ்ட் ஆகிவிட்டார் என்பது. கண்டிப்பாக ஓய்வு தேவை என்ற போதும் தொடர்ந்து கை பேசி வழியாக திட்டமிடலையும், ஏற்பாடுகளுக்கு சந்திக்க வேண்டியவர்களைப் பற்றியும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பேசிக்கொண்டே இருந்தார். தோழர் பாமரன் அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் நிறைய வேலைகளை செய்து உதவினார்.

சுற்றிக்கொண்டிருந்ததில் எல்லோரிடமும் அதிகமாக கதைக்கவோ, அறிமுகமாகிக் கொள்ளவே என்னால் முடியாமல் போனது. அதோடு நிகழ்வுகளையும் கூட.. உட்கார்ந்து ரசிக்கும் வாய்ப்பு இழந்தேன். 😦

நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள் விரிவாக பதிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதனால்.. நான்,  கண்ட சிலவற்றை மட்டும் இங்கே..  சில துணுக்குகளாகத் தருகிறேன்.

* குளிரூட்டப்பட்ட அறை, இணைய வசதி, புரஜெக்டர், திரை என்று ஏற்பாடாகி இருந்தது நிகழ்வுக்கான இடம்.

* பட்டறை என்று அறிவிக்கப்பட்ட போதிலும், பதிவர் சந்திப்பின் அடுத்த கட்டமாகவும், பட்டறையின் முதல் படியாகவுமே இந்த நிகழ்வு இருந்தது.

* ஏற்பாடுகள் செய்திருந்த ஓசை செல்லா வெள்ளிக்கிழமையே படுத்து விட்டார். அதனால் அவரின் திட்டப்படி நிகழ்வுகளை ஒழுங்கு படுத்த முடியாமல்.. ஏதோ.. என் இஷ்டத்துக்கு போட்டு, அடித்து ஆடிவிட்டேன். (நண்பர்கள் மன்னிப்பார்களாக!)

* செல்லா இல்லாத குறை பெரிது என்றாலும் அதை ஈடுகட்டும் விதமாக தோழர் பாமரன் செயலாற்றியதால் இந்த சந்திப்பும், நிகழ்வும் சாத்தியமானது.

* டெக்னிக்கல் விசயங்களை பேச வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘தண்டோரா’விக்கி, பொன்ஸ் மற்றும் காசி ஆகியோர் வராதது ஏமாற்றமே!

* எந்த முறையும் இல்லாமல் இந்த முறை போலியைப் பற்றி பேச்சு வந்தது. தொடங்கியவர் உண்மைத் தமிழன். அவர் பெயரில் இருக்கும் போலி.. அவரின் பதிவுகளுக்கே வந்து பின்னூட்டம் போட்டு கடுப்பேத்துவதாகக் கூறினார். (உ.க.ச-வை துவங்கி வைத்து உண்மைத்தமிழனை ஓட்டிக்கொண்டிருந்தார் சென்ஷி. முகுந்த்,மா.சி உட்பட பலர் உடனடி மெம்பரானது தான் ஆச்சரியம்!)

* டெல்லியில் இருந்து ரயிலில் வந்ததாகச்சொல்லி அசத்தினார் மாப்பிள்ளை சென்ஷி.( எனக்கென்னமோ.. அவர் அடிக்குற காத்துலயே வந்துருப்பாருன்னு தோனுது. கூட்டம் முடிந்து கிளம்பும் போது கூட அருகில் எங்காவது மலை, குன்று ஏதாவது இருக்கா… நல்லா காத்து அடிக்குமான்னு கட்டிட காவலாளியிடம் கேட்டுக்கொண்டிருந்தார்)

* பதிவர் அல்லாத சிலரும் கலந்துகொண்டு குறிப்புகள் எடுத்தது மகிழ்வான விசயம்.(ஜெ.பாலா, வின்செண்ட், சே, மயில்,ஜெய்)

* மிகவும் எதிர் பார்க்கப்பட்ட உள்ளூர் காரர்களான சிபி, அனுசுயா, தமிழ்பயணி சிவா போன்றோர் எட்டிப்பார்க்கவோ, போன் போடவோ கூட இல்லை என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த ஏமாற்றம்.

* ராஜாவனஜ் நான் கற்பனை செய்திருந்த மாதிரியே இருந்தார். அதனால் படி ஏறி வரும் போதே அடையாளம் கண்டு அழைத்ததும் மகிழ்ந்து போனார்.

* பேரா.ரமணியின் நீண்ட உரையின் ஊடாகவே பல விவாதங்கள் தோன்றி, மறைந்தன. அவர் கட்டுரையை வாசிக்க நம்ம அண்ணன் உண்மைத் தமிழன் என்னை வினோதமாகப் பார்த்து சிரித்தார். பின் நவீனத்துவம் குறித்து பேசியது அவருக்கு பிடிக்கவில்லையா..? இப்படி நடுவில் மாட்டிக்கொண்டோமே என்று நினைத்தாரா தெரியவில்லை.

* வெளியே மிதக்கும் அய்யா சுகுணாவுக்கான ரவி கொண்டுவந்திருந்த பார்சலை மட்டுமே பார்த்தேன். அதன் உள் இருந்த சிற்பத்தை பார்க்கமுடியாமல் ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியே வந்திருந்தேன்.

* ஏ.ஸி இருந்தது. ஆனால் அதையும் மீறி வீடியோ கிராபரின் லைட் வெட்பத்தை உமிழ்ந்துகொண்டிருந்ததால்.. எல்லோர் கையிலும் கர்ச்சீப் இருந்தது.

* பதிவர்களின் உரையாடலின் போது செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் விவாதத்தில் கலந்து கொண்டார். (அடுத்த முறை பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க தனி நேரம் ஒதுக்கலாம். ஏனெனில்.. வந்திருந்தவருக்கு தமிழ்பதிவுகள் குறித்தே அறியாத போது.. அவர்களை வைத்துக்கொண்டு நாம் உரையாடுவது என்பது கொஞ்சம் சங்கடமானது)

dsc00064.jpg

* தமிழ்மண நிவாகத்திடம் ஸ்பான்சர் கேட்டோம். டீ-சர்ட் வாங்கச்சொல்லி பணம் அனுப்பி வைத்தார்கள். அதை திருப்பூரில் இருக்கும் ஒரு தோழரிடம் விபரமும், லோகோ மாதிரியையும் கொடுத்து பணத்தை அவருக்கு அனுப்பினோம். வெள்ளைக்கலர் டீ-சர்ட்ல் வெள்ளைக் கலரியே தமிழ்மண லோகோவை பிரிண்ட் செய்து, கொடுத்து அனுப்பி விட்டார்கள். அதனால் அதை விநியோகிக்க முடியாமல் போனது. அதனை மாற்றவும் முடியாது என்று சொல்லிவிட்டதால்.. பிரிண்ட் செய்தவரிடமே திருப்பக் கொடுத்துவிடும் படி சொல்லி விட்டேன்.
(அடுத்த பட்டறைக்கு கை காசு போட்டு இதனை சரி பண்ணனும்.)

* மா.சி- நன்றாக பேசியதாகவும் நிறைய குறிப்புகள் எடுத்திருப்பதாகவும் சொல்லி, தன் வீட்டில் இணைய இணைப்பு வாங்கனும் என்று சொன்னான் என் நண்பன் ஜெ.பி.(நான் தான் வெளியில போய்ட்டேன்)

* தூங்கி எழுந்த சிரில் அலெக்ஸை  வீடியோ  சாட்க்கு  வரவழைத்து  கொடுமை செய்தோம்.

* வீடியோ சாட் வழி கொடுமையில் இருந்து தப்பியவர்கள் இருவர். ஒருவர் பாஸ்டன்பாலா, இன்னொருவர் ‘தகடூர் தல’ என்று அழைக்கப்படும் ஹைகோபி.   இதில் முன்னவரிடம் இருந்து தகவலே இல்லை. கோபி காந்திருந்து வெளியே வந்த பின் போன் போட்டு அழைத்தோம். கோபி மிகவும் வருந்தினார். விடு தல.. அடுத்த தபா பார்த்துக்கிடலாம். 🙂

* முகுந்த் எடுத்த வகுப்பு நன்றாக இருந்தது. அதனை மின்னூலாக்கச் சொல்லி கேட்டோம். அவரும் செய்திருக்கிறார். அது இங்கே கிடைக்கும்.

Advertisements

Entry filed under: பதிவர் சதுரம் ;-)).

கோவையில் பார்த்தது.. பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Veyilaan  |  7:57 முப இல் மே 22, 2007

  திருப்பூரில் உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன்.

  மறுமொழி
 • 2. ravidreams  |  8:20 முப இல் மே 22, 2007

  பட்டறையின் தொடக்கம், சந்திப்பின் நீட்சி என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அதனால் அதிகம் கருத்து சொல்ல விரும்பவில்லை 🙂 ஏற்கனவே பதிவெழுதத் தெரிந்த எல்லோரும் திரும்பத் திரும்ப ஒன்றுகூடி நமக்குத் தெரிந்த விசயங்களையே பேசிக் கொண்டிராமல் அவர் அவர் ஊர்களில் உள்ள கல்லூரிகள். இலக்கிய மன்றங்கள், எழுத்தாளர் சங்கங்களில் கணினி, கணினியில் தமிழ்த் தட்டச்சு, பதிவுகள் குறித்து அறிமுகப்படுத்தி வைத்தால் கூடுதல் பலனிருக்கும் என்பது என் நம்பிக்கை.

  மறுமொழி
 • 3. மஞ்சூர் ராசா  |  8:40 முப இல் மே 22, 2007

  இன்னும் நிறைய விடுப்பட்டிருக்கும். அதையும் சேர்த்து இன்னொரு பதிவாக போட்டுவிடுங்கள்.

  மறுமொழி
 • 4. வினையூக்கி  |  9:07 முப இல் மே 22, 2007

  🙂 🙂

  மறுமொழி
 • 5. உண்மைத்தமிழன்  |  9:36 முப இல் மே 22, 2007

  ம்.. சந்தோஷம்..

  மறுமொழி
 • 6. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  9:55 முப இல் மே 22, 2007

  ravi,

  நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கிறது. கோவையிலேயே இரண்டு அமர்வுகள் திட்டமிட்டிருந்தேன்.

  முதல் அமர்வு: பதிவர் அல்லாதவர்களுடனான சந்திப்பு. இது நம்மவர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுக்கும்.

  இரண்டாவது அமர்வு: டெக்னிக்கல் விசயங்களைப் பற்றியது. இதற்கு என்று கேவையில் இருக்கும் சில இலக்கிய அமைப்பு சார்ந்த நண்பர்களுக்கு முன்னமே தகவல் கொடுத்திருந்தேன். அவர்களை உள்ளே கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அது ஜெ.பாலா+வின்செண்ட் போன்றவர்களால் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் கொடுத்தது மகிழ்ச்சியான விசயம்.

  மறுமொழி
 • 7. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  9:57 முப இல் மே 22, 2007

  ராசா… விட்டுப்போனவைகளை நண்பர்கள் பட்டியல் போட்டுகிட்டு இருக்காங்க! நான் தான் உருப்படியா ஒரு இடத்தில் இல்லையே! 😦

  மறுமொழி
 • 8. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  9:57 முப இல் மே 22, 2007

  வெயிலான்… மிக்க நன்றி! தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்.

  மறுமொழி
 • 9. bsubra  |  10:12 முப இல் மே 22, 2007

  🙂

  மறுமொழி
 • 10. Kovai Tamil Bloggers Camp - Coimbatore Meet « Snap Judgment  |  10:20 முப இல் மே 22, 2007

  […] கோவை சந்திப்பு – சில துளிகள் « ♠ யெஸ்.ப… […]

  மறுமொழி
 • 11. ravidreams  |  12:00 பிப இல் மே 22, 2007

  உள்ளூர்க்காரர் செல்லாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது உட்பட்ட பல காரணங்களால் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது எவ்வளவு சிரமம் என்று உணர்ந்தே இருக்கிறேன். இருந்தும் பட்டறை இன்னொரு சந்திப்பாக முடிந்ததில் ஏமாற்றமே. நீங்கள் சொன்ன மாதிரி இந்த அனுபவங்கள் அடுத்த பட்டறையை இன்னும் சிறப்பாக நடத்த உதவும் என்று நம்புகிறேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: