அறிவிப்பு: இட மாற்றம்!

இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான். சூன்யவெளியில் இடம் வாங்கிப்போட்டு அங்கன போய் சேந்துட்டேன்னு சொல்லவே இந்த பதிவு.

வாங்க மக்கா.. அங்கனையும் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்க.. இனி நம்ப ஜாகை அங்கனதான். 😀

http://blog.balabharathi.net

ஓகஸ்ட் 15, 2007 at 1:19 முப 3 பின்னூட்டங்கள்

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது!

அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும் என்றும் நம்புகிறேன்.

இப்போ நான் சொல்ல வந்த செய்தி:-

உங்களால் தான் இது சாத்தியமானது.

பதிவர்களின் ஆதரவு இல்லையெனில் இந்த (கனவு)பட்டறை இப்படி நடந்தேறி இருக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

பட்டறைக்கு விளம்பரம் கொடுத்தவர்கள் முதல்.. பண உதவி செய்தவர்கள் வரை.. அத்தனை வலை உலக தமிழர்களுக்கும்..

என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

நன்றி

பட்டறையின் செய்தி தொகுப்புக்கு:- தொடர்புகொள்ள.. சொடுக்கவும் பாபாவின் வலைசேகரிப்பு பக்கததை! 🙂

ஓகஸ்ட் 5, 2007 at 4:03 பிப 15 பின்னூட்டங்கள்

பகை- குறும்படம்

அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே!

(அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்)

மற்ற படங்களைக்காண.. இங்கே சொடுக்கவும்!

ஓகஸ்ட் 1, 2007 at 7:53 முப 4 பின்னூட்டங்கள்

ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..!

அண்ணாத்த ஓசை செல்லா… தொடர்ந்து பயர்ஃபாக்ஸ் பயன்படுத்தி வருபவர். அதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். பெ.மகேந்திரனின் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தான் பயன் படுத்தும் பயர்ஃபாக்ஸ் இணைய உலாவியில் சரியாக தெரியவில்லை என்றதும் அதற்கும் ஒரு பதிவு போட்டு விட்டார்.

ஆனால்.. அண்ணாத்த.. இப்படி பதிவு போடுவதோடு அவ்வப்போது மற்றவர்களின் பதிவுகள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது. நான் ஏற்கனவே பயர்ஃபாஸ் போட்ட பதிவிலேயே பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதில் இன்று இவர் சொல்லும் ஜஸ்டிபை பிரச்சனை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

தவிர, நம்ம ரவிசங்கர் (இவருக்கான சுட்டி என் வலைப்பதிவில் இடதுபக்கம் இருக்கிறது) ஏற்கனவே பல இடங்களில் பலமுறை பேசி வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவணித்து வந்திருந்திருக்கலாம். பரவாயில்லை. என் சிறு மூளைக்கு பட்டதை நான் சொல்கிறேன்.

முதலில் இந்த பக்கத்தில் இருக்கும் குரங்குத்தலை நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த பக்கத்திற்கு போனால்.. வலது ஓரம் INSTALL THIS SCRIPTS என்று இருக்கும் பொத்தானை க்ளிக் செய்து அந்த ஸ்க்ரிப்ட்-ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போது பயர்ஃபாக்ஸை க்ளோஸ் செய்து விட்டு.. மீண்டும் திறந்து நீங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்ட (ஜஸ்டிபை செய்த பதிவு) பக்கத்தை திறந்து படியுங்கள். மேட்டர் ஓவர்!

ஜூலை 31, 2007 at 9:27 முப 11 பின்னூட்டங்கள்

நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்!

வேற என்னங்க சொல்லுறது..?

எச்சரிக்கை:-

 குழந்தைகள் மற்றும் பலகீனமான இதயமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்..!

பா.க.ச ஆளுங்களுக்கு பயந்து போய்.. சில சென்னை வாசிகளிடம் மட்டும்(மகி விதிவிலக்கு) சொல்லி விட்டு ஜெயா டி.வி- நிலையத்துக்கு போனேன். அப்படியும் நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்து விட்ட அகிலன் நிலையத்துக்கு போன் போட்டு, பா.க.ச என்றால் என்ன என்று கேட்கணும்னு சொல்ல.. அரண்டு போன நிகழ்ச்சி இயக்குனர் அந்த தொலைபேசி இணைப்பு என் பக்கம் வராமலேயே பார்த்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் அனுபவங்களை அண்ணன் மா.சி ஏற்கனவே சொல்லி விட்டார். அனுபவங்கள் எனக்கும் கூட கிட்டதட்ட அதுபோலவே இருந்தது.

அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு (பதினாங்கு நிமிடங்கள் தான்.. தப்பிச்சீங்க!) கிடைத்தது. அது மேலே!

இது பற்றி சிந்தநதி போட்ட பதிவு இங்கே!

தம்பி லக்கி உடைத்த டீவி இங்கே! {ஜெயா டீவியில் வந்தது பிடிக்காமல் தான் அவர் டிவியை உடைத்து விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு!} 🙂

[இந்த விடியோவை நண்பர்.ப்ரியன் தான் வலையேற்றிக்கொடுத்தார். ஆனால்.. ஒரே நாளில் கூகிள் இந்த விடியோவை ரிஜெக்ட் செய்து விட்டதாம். வேறு எங்காவது வலையேற்ற முடியுமான்னு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படி ஏற்றியதும் வேறு சுட்டி தருகிறேன். :(]

நண்பர் ப்ரியன் இங்கே அப்லோட் பண்ணி இருக்காராம். 

ஜூலை 30, 2007 at 12:54 பிப 17 பின்னூட்டங்கள்

தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?
இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?

இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்!

தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது.

சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.

இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

என் மொபைலில் ஆத்திச்சூடி!

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார்.பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 20, 2007 at 1:14 பிப 19 பின்னூட்டங்கள்

ஒன்று- லக்கிக்கு இருபத்திநாலு மணி நேர அவகாசம்!!

நண்பர்களே!

ஆளாளுக்கு பதிவர்குறித்த விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ.. நானும் ஒரு விளையாட்டை தொடங்கி வைக்கிறேன். அது தான் ஒன்று.(முன்னமே சிலர் எட்டு போட அழைத்திருக்கிறார்கள். அதை எழுதுவது அலுப்பாகவும், சலிப்பாகவும் இருக்கு. என் புலம்பல்கள் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஒரு காரணம்)

ஏற்கனவே சுற்றில் வந்த பதிவுகள் போலத்தான்.. இந்த ஒன்று என்றாலும்.. இதில் ஒரே ஒரு கேள்வி கேட்கனும். அதுவும் ஒருத்தர் கிட்ட மட்டும். அந்த ஒரு கேள்விக்கு பதிலை ஒரு வரியிலையும் சொல்லலாம். ஒரு கட்டுரையோ எழுதலாம். அது எழுதுபவர்களின் சாமர்த்தியத்தினைப் பொறுத்தது…ஒரு நாள் மட்டுமே அவகாசம். இருபத்திநாலு மணி நேரத்தில் பதில் பதிவு போட்டுவிடணும். கூடிய வரையில் இந்த ஒன்று நாம் கேட்டுக்கும் அந்த பதிவரின் இன்னொரு முகத்தினை வெளியே கொண்டுவருவது போல அமைந்தால் நலம். சரி.. இனி ஆட்டத்துக்கு போகலாம். (இதனை பதில் சொல்லும் பதிவர் அவர் பதில் பதிவில்.. தொடக்கத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ சேர்க்க வேண்டும் என்பது மட்டும் நிபந்தனை)

வலை உலக சின்னகுத்தூசி, சுனாமியார், என்று பலராலும் அழைக்கப்படும் தோழன் – லக்கிலுக்கிடம் ரொம்ப நாள ஒரு கேள்வி கேட்கனும்னு நெனைச்சு கிட்டு இருக்கேன். அவரும் பதில் சொல்லுவார் என்ற எண்ணத்தில் ஆட்டத்தை தொடங்குகிறேன்.

பொதுவாக எங்கு சென்றாலும் கலைஞர்.கருணாநிதிக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் உங்களுக்கு கலைஞரிடம் பிடிக்காத குணம் எது?

இது தான் நான் லக்கிலுக்கிடம் கேட்க விரும்பும் கேள்வி. இதற்கான பதிலை இருபத்திநாலுமணி நேர அவகாசத்தில் சொல்லி இந்த ஆட்டத்தை தொடருவார் என்றும் நம்புகிறேன்.

ஜூலை 17, 2007 at 10:12 முப 16 பின்னூட்டங்கள்

Older Posts


தமிழ்99


மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,594 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

ஓடைகள்