ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..!

அண்ணாத்த ஓசை செல்லா… தொடர்ந்து பயர்ஃபாக்ஸ் பயன்படுத்தி வருபவர். அதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். பெ.மகேந்திரனின் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தான் பயன் படுத்தும் பயர்ஃபாக்ஸ் இணைய உலாவியில் சரியாக தெரியவில்லை என்றதும் அதற்கும் ஒரு பதிவு போட்டு விட்டார்.

ஆனால்.. அண்ணாத்த.. இப்படி பதிவு போடுவதோடு அவ்வப்போது மற்றவர்களின் பதிவுகள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது. நான் ஏற்கனவே பயர்ஃபாஸ் போட்ட பதிவிலேயே பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதில் இன்று இவர் சொல்லும் ஜஸ்டிபை பிரச்சனை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

தவிர, நம்ம ரவிசங்கர் (இவருக்கான சுட்டி என் வலைப்பதிவில் இடதுபக்கம் இருக்கிறது) ஏற்கனவே பல இடங்களில் பலமுறை பேசி வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவணித்து வந்திருந்திருக்கலாம். பரவாயில்லை. என் சிறு மூளைக்கு பட்டதை நான் சொல்கிறேன்.

முதலில் இந்த பக்கத்தில் இருக்கும் குரங்குத்தலை நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த பக்கத்திற்கு போனால்.. வலது ஓரம் INSTALL THIS SCRIPTS என்று இருக்கும் பொத்தானை க்ளிக் செய்து அந்த ஸ்க்ரிப்ட்-ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போது பயர்ஃபாக்ஸை க்ளோஸ் செய்து விட்டு.. மீண்டும் திறந்து நீங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்ட (ஜஸ்டிபை செய்த பதிவு) பக்கத்தை திறந்து படியுங்கள். மேட்டர் ஓவர்!

11 comments ஜூலை 31, 2007

நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்!

வேற என்னங்க சொல்லுறது..?

எச்சரிக்கை:-

 குழந்தைகள் மற்றும் பலகீனமான இதயமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்..!

பா.க.ச ஆளுங்களுக்கு பயந்து போய்.. சில சென்னை வாசிகளிடம் மட்டும்(மகி விதிவிலக்கு) சொல்லி விட்டு ஜெயா டி.வி- நிலையத்துக்கு போனேன். அப்படியும் நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்து விட்ட அகிலன் நிலையத்துக்கு போன் போட்டு, பா.க.ச என்றால் என்ன என்று கேட்கணும்னு சொல்ல.. அரண்டு போன நிகழ்ச்சி இயக்குனர் அந்த தொலைபேசி இணைப்பு என் பக்கம் வராமலேயே பார்த்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் அனுபவங்களை அண்ணன் மா.சி ஏற்கனவே சொல்லி விட்டார். அனுபவங்கள் எனக்கும் கூட கிட்டதட்ட அதுபோலவே இருந்தது.

அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு (பதினாங்கு நிமிடங்கள் தான்.. தப்பிச்சீங்க!) கிடைத்தது. அது மேலே!

இது பற்றி சிந்தநதி போட்ட பதிவு இங்கே!

தம்பி லக்கி உடைத்த டீவி இங்கே! {ஜெயா டீவியில் வந்தது பிடிக்காமல் தான் அவர் டிவியை உடைத்து விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு!} :)

[இந்த விடியோவை நண்பர்.ப்ரியன் தான் வலையேற்றிக்கொடுத்தார். ஆனால்.. ஒரே நாளில் கூகிள் இந்த விடியோவை ரிஜெக்ட் செய்து விட்டதாம். வேறு எங்காவது வலையேற்ற முடியுமான்னு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படி ஏற்றியதும் வேறு சுட்டி தருகிறேன். :(]

நண்பர் ப்ரியன் இங்கே அப்லோட் பண்ணி இருக்காராம். 

17 comments ஜூலை 30, 2007

தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!!

கணிணியுடம் இணைக்கக்கூடியதா உங்கள் மொபைல்?
இணைய வசதியுடன் இருக்கிறதா.. உங்கள் மொபைல்?

இதோ ஈ-புக் மாதிரி வந்து விட்டது மொபைல் புக்! அதுவும் நம் தாய் மொழி தமிழில்!

தமிழகத்தை சேர்ந்த கணேஷ்ராம் என்ற இளைஞரின் மொபைல்வேதா என்ற நிறுவனம் இச்சேவையை வழங்கி வருகிறது.

சக பதிவரான தம்பி “பிரிண்சு என்னாரெசு “மூலம் இவர்கள் முதலில் பெரியார் வாழ்க்கைச் சுருக்கத்தினை தமிழ், ஆங்கிலத்தில் பென்நூலக்கி இருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பு இவர்களை தொடர்ந்து தமிழ் மென்நூல்களின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது இவர்களின் இணையதளத்தில் 150 தமிழ் நூல்களை மொபைல்-புக் ஆக்கி இருக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கை சுருக்கத்திற்குப் பின் பழந்தமிழ் இலக்கியங்களில் தங்களின் சேவையை தொடங்கி இருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசனின் கவிதைகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வந்து விடுவதாகவும் சொல்கிறார் கணேஷ்ராம். ஒரு எம்.பி3 பாடல் உங்கள் மொபைலில் பிடிக்கும் இடத்தில் குறைந்தது 100 மொபைல் நூல்களை நீங்கள் சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

காப்புரிமை பிரச்சனை இல்லாத எழுத்துக்களை இலவசமாக தொடர்ந்து கொடுக்கப்போவதாகவும் சொல்கிறார். கூடவே பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்களை காப்புரிமை பெற்று.. அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.

இப்பாதைக்கு இந்த இலவச மொபைல் நூல்களை பெறுவதற்கு இந்த தளத்தில் உங்களுக்கான ஒரு பயணர்கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோதித்துப் பாருங்கள்.

என் மொபைலில் ஆத்திச்சூடி!

ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் பதிவர் முகாமில் கணேஷ்ராம் வந்து.. இது பற்றிய டெமோ கொடுக்கவும் நேரம் ஒதுக்கித்தரும் படி கேட்டிருக்கிறார்.பட்டறையில் நாம் கொடுக்கப்போகும் இறுவட்டிலும்.. தங்களின் மொபைல் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

19 comments ஜூலை 20, 2007

Next Posts Previous Posts


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

blogroll

இங்கே வந்தவர்களால்..