Posts filed under 'பதிவர் பட்டறை'
சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது!
அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும் என்றும் நம்புகிறேன்.
இப்போ நான் சொல்ல வந்த செய்தி:-
உங்களால் தான் இது சாத்தியமானது.
பதிவர்களின் ஆதரவு இல்லையெனில் இந்த (கனவு)பட்டறை இப்படி நடந்தேறி இருக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
பட்டறைக்கு விளம்பரம் கொடுத்தவர்கள் முதல்.. பண உதவி செய்தவர்கள் வரை.. அத்தனை வலை உலக தமிழர்களுக்கும்..
என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பட்டறையின் செய்தி தொகுப்புக்கு:- தொடர்புகொள்ள.. சொடுக்கவும் பாபாவின் வலைசேகரிப்பு பக்கததை!
15 comments ஆகஸ்ட் 5, 2007





