Posts filed under 'கவிதை'

சொற்களற்ற சூன்யவெளியில்..

ஒருபோதும் சோர்ந்து போனதில்லை
மனிதர்களிடம் பேசும் பொழுதுகளில்

சோகங்கள்
துரோகங்கள்
வருத்தம்
மகிழ்ச்சி
என எதுபற்றியேனும்
பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது
பல சமயங்களில்

முன் சிரித்து
பின் கூறு போடுபவர்கள்
இருக்கின்ற போதிலும்
இவர்களை ஒதுக்கிவிட
தோன்றியதில்லை

பூனை,நாய்,கிளி
ஏன் கடவுள்களே கூட
பதில் பேசாமலிருக்கையில்
ஏதாவது பேசும்
மனிதர்களை புறந்தள்ள முடிவதில்லை.

6 comments ஜூலை 6, 2007

ங்கொய்யால…

கூட்டம் போடு
பழந்தமிழ்
இலக்கியங்களில்
புளங்காகிதமடை

கூட்டத்தில் கலகம் செய்
குழுசேர்ந்து
குசுகுசுத்துக்கொள்

புலியை விரட்டிய
மறத்தியின்
பால் குடித்தவனென
மார் தட்டிக்கொள்

யதார்த்தம்
மாயா- யதார்த்தம்
நவீனம்
பின்-நவீனம்

அரசியல் பேசு
அலோவென
கை குலுக்கிக்கொள்

எழுது
பிரதி அழி
நாவறளப்பேசு
கொன்றுகுவி

அடையாளம்
தொலைத்ததறியாமல்
கூச்சலிடு
தமிழனென்று

குப்பிகளுடைய
கோப்பையை காலி செய்

மசுரு
சோற்றுக்கு
வழியில்லாமல்
சாகிறான் விவசாயி.

29 comments ஜூலை 5, 2007

சிரங்குகள்

உடலெங்கும் சிரங்குகள்
அவ்வப்போது
சொறிந்து கொள்ளத்தோன்றும் விதத்தில்

ஒழுங்காய்த்தான் இருந்தன முதலில்
ஆரோக்கியம் சேர்க்குமென
ஆசைப்பட்டு பூசிக்கொண்ட களிம்புகளால்
விளைந்தவை இவை

களிம்புகளை வழங்கியவர்களும்
சொறிந்துகொண்டுதானிருக்கிறார்கள்
இருந்தும் மோகம்
குறையவில்லை மக்களுக்கு

முதலில் அதன்
விளைவைப் பற்றி விளக்க வேண்டும்
பின்னரதனை அழிக்கவேண்டும்
அப்போது தான்
சரிபடும் தேகமும், தேசமும்!

10 comments ஜூலை 3, 2007

இருப்பு

மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.

6 comments ஜூன் 26, 2007

அடையாளம்

தூசுகளால் நிறைந்த
கண்ணாடி கதவில்
பெயரெழுதிச் செல்கிறது
கோடைச்சாரல்.

4 comments ஜூன் 26, 2007

Previous Posts


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

blogroll

இங்கே வந்தவர்களால்..

அண்மைய இடுகைகள்

வகைகள்

ஓடைகள்

வகை மேகம்

கவிதை சமூகம்/ சலிப்பு சினிமாப் பார்வை சிறுகதை தகவல்கள் பதிவர் சதுரம் ;-)) பதிவர் பட்டறை வாசிப்பனுபவம் வீடியோ