Archive for மே 25th, 2007

பயர்ஃபாக்ஸ் சிறந்தது ஏன்?

நீங்கள் பயன் படுத்தும் இணைய உலாவி எது? இண்டர்நெட் எக்ஸ்ஃப்ளோளர் என்றாலும் சரி அல்லது பயர்பாக்ஸ் என்றாலும் சரி.
கீழே சொல்லப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பயன் படலாம்.

1. மற்ற உலாவிகளை விட பயர்பாக்ஸ் பாதுகாப்பானது. இதன் மூலம் நாம் இணையத்தை அணுகும் போது.. அந்த பக்கத்தில் இருக்கும் படங்களால் பக்கம் டவுண்ட்லோடு ஆகா.. நேரம் அதிகம் செலவாகும். படத்தினை விட நமக்கு செய்தி முக்கியமானதாக இருக்கலாம். அப்படியான தருணங்களில் பயர்பாக்ஸ் செட்டிங் பகுதியில் படங்கள் தேவையில்லை என்ற பொத்தானை நாம் க்ளிக் பண்ணி இருந்தோமேயானால்.. வலைப்பக்கம் இலகுவாக திறந்துகொள்ளும்.

2. பயர்பாக்ஸ் பாவிப்பவராக இருந்தால்.. எ-கலப்பை மாதிரியான எந்த மென்பொருளையும் தேடி ஓட வேண்டியதில்லை. தமிழ்விசை என்ற செயலியை நிறுவிக்கொண்டால் போதும்.. ஆறு வகை தட்டச்சு முறைகள் கொண்ட தமிழ் எழுதி கிடைத்து விடும். இதை எ-கலப்பை நிறுவுவதை விட வேகமாக நிறுவிக்கொள்ள முடிகிறது. மேலும் வீடு,அலுவலகம் தவிர்த்து ப்ரவுசிங் செண்டர் மாதிரியான இடங்களிலும் பயர்பாக்ஸை பயன்பாட்டுக்கு உள்ளன. அங்கேயும் இதனை சிலவினாடிகளில் நிறுவிக்கொண்டு தமிழில் நாம் விரும்பும் தட்டச்சு முறையில் எழுதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

3. பயர்பாக்ஸ் தமிழிலும் கிடைக்கிறது. இதில் எல்லா செயல் முறைகளும் தமிழில் இருப்பதால் பாவிப்பது மிக எளிது.

4. வேலை பார்க்கும் போது பாடல் கேட்டும் பழக்கமுடையவரா நீங்கள்..?, பயர்பாக்ஸ் உலாவியில் இசையை கேட்டுக்கொள்ளக்கூடிய ப்ளேயேரையும் நிறுவிக்கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் இணையத்திலும் பாடல் கேட்கலாம். அல்லது உங்கள் கணினியில் சேமிப்பில் இருக்கும் பாடல்களையும் கேட்கலாம்.

4. ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் உபயோகிப்பவராக இருந்தால் அதற்கனா செயலியை இயக்கிவிட்டால் உங்கள் உலாவியின் மூலையிலேயே மெயில் வந்த தகவல்களை பெற முடியும். தனியாக அந்தந்த தளங்களுக்குச் சென்று எட்டிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.

5. பயர்பாக்ஸில் TAB மூலம் அடுத்த சாரளத்தை திறப்பவரா நீங்கள். எத்தனை சாரளங்கள் திறந்து வைத்திருந்தாலும் அத்தனை சாரளங்களையும் ஒரே பக்கத்தில் பார்ப்பதற்கான செயலியும் கிடைக்கிறது.

6. அது போல TAB களுக்கு மாறும் போது 3D தோற்றத்தை தரும்படியான செயலி அசத்துகிறது.

இவை தவிர.. நாம் பார்க்கும் தளம், மெயில் போன்றவற்றில் இருக்கும் தேவையற்ற ஜாவா ஸ்க்ரிப் போன்றவைகளை செயல்படாமல் தடுக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் கூட செயலிகள் இருக்கின்றன.

இவை போன்ற ஏகப்பட்ட செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இந்த பக்கத்திற்கு அடிக்கடி எட்டிப்பார்த்தால் போதும்.

————

இது பூங்காவில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

http://poongaa.com/content/view/1770/1/

19 comments மே 25, 2007


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

blogroll

இங்கே வந்தவர்களால்..

அண்மைய இடுகைகள்

வகைகள்

ஓடைகள்

வகை மேகம்

கவிதை சமூகம்/ சலிப்பு சினிமாப் பார்வை சிறுகதை தகவல்கள் பதிவர் சதுரம் ;-)) பதிவர் பட்டறை வாசிப்பனுபவம் வீடியோ