அறிவிப்பு: இட மாற்றம்!

இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான். சூன்யவெளியில் இடம் வாங்கிப்போட்டு அங்கன போய் சேந்துட்டேன்னு சொல்லவே இந்த பதிவு.

வாங்க மக்கா.. அங்கனையும் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்க.. இனி நம்ப ஜாகை அங்கனதான். :D

http://blog.balabharathi.net

ஆகஸ்ட் 15, 2007 at 1:19 மு.பகல் 3 பின்னூட்டங்கள்

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது!

அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும் என்றும் நம்புகிறேன்.

இப்போ நான் சொல்ல வந்த செய்தி:-

உங்களால் தான் இது சாத்தியமானது.

பதிவர்களின் ஆதரவு இல்லையெனில் இந்த (கனவு)பட்டறை இப்படி நடந்தேறி இருக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

பட்டறைக்கு விளம்பரம் கொடுத்தவர்கள் முதல்.. பண உதவி செய்தவர்கள் வரை.. அத்தனை வலை உலக தமிழர்களுக்கும்..

என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

நன்றி

பட்டறையின் செய்தி தொகுப்புக்கு:- தொடர்புகொள்ள.. சொடுக்கவும் பாபாவின் வலைசேகரிப்பு பக்கததை! :)

ஆகஸ்ட் 5, 2007 at 4:03 பிற்பகல் 15 பின்னூட்டங்கள்

பகை- குறும்படம்

அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே!

(அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்)

மற்ற படங்களைக்காண.. இங்கே சொடுக்கவும்!

ஆகஸ்ட் 1, 2007 at 7:53 மு.பகல் 4 பின்னூட்டங்கள்

ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..!

அண்ணாத்த ஓசை செல்லா… தொடர்ந்து பயர்ஃபாக்ஸ் பயன்படுத்தி வருபவர். அதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். பெ.மகேந்திரனின் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் தான் பயன் படுத்தும் பயர்ஃபாக்ஸ் இணைய உலாவியில் சரியாக தெரியவில்லை என்றதும் அதற்கும் ஒரு பதிவு போட்டு விட்டார்.

ஆனால்.. அண்ணாத்த.. இப்படி பதிவு போடுவதோடு அவ்வப்போது மற்றவர்களின் பதிவுகள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நல்லது. நான் ஏற்கனவே பயர்ஃபாஸ் போட்ட பதிவிலேயே பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதில் இன்று இவர் சொல்லும் ஜஸ்டிபை பிரச்சனை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

தவிர, நம்ம ரவிசங்கர் (இவருக்கான சுட்டி என் வலைப்பதிவில் இடதுபக்கம் இருக்கிறது) ஏற்கனவே பல இடங்களில் பலமுறை பேசி வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவணித்து வந்திருந்திருக்கலாம். பரவாயில்லை. என் சிறு மூளைக்கு பட்டதை நான் சொல்கிறேன்.

முதலில் இந்த பக்கத்தில் இருக்கும் குரங்குத்தலை நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து, இந்த பக்கத்திற்கு போனால்.. வலது ஓரம் INSTALL THIS SCRIPTS என்று இருக்கும் பொத்தானை க்ளிக் செய்து அந்த ஸ்க்ரிப்ட்-ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போது பயர்ஃபாக்ஸை க்ளோஸ் செய்து விட்டு.. மீண்டும் திறந்து நீங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்ட (ஜஸ்டிபை செய்த பதிவு) பக்கத்தை திறந்து படியுங்கள். மேட்டர் ஓவர்!

ஜூலை 31, 2007 at 9:27 மு.பகல் 11 பின்னூட்டங்கள்

நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்!

வேற என்னங்க சொல்லுறது..?

எச்சரிக்கை:-

 குழந்தைகள் மற்றும் பலகீனமான இதயமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்..!

பா.க.ச ஆளுங்களுக்கு பயந்து போய்.. சில சென்னை வாசிகளிடம் மட்டும்(மகி விதிவிலக்கு) சொல்லி விட்டு ஜெயா டி.வி- நிலையத்துக்கு போனேன். அப்படியும் நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்து விட்ட அகிலன் நிலையத்துக்கு போன் போட்டு, பா.க.ச என்றால் என்ன என்று கேட்கணும்னு சொல்ல.. அரண்டு போன நிகழ்ச்சி இயக்குனர் அந்த தொலைபேசி இணைப்பு என் பக்கம் வராமலேயே பார்த்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் அனுபவங்களை அண்ணன் மா.சி ஏற்கனவே சொல்லி விட்டார். அனுபவங்கள் எனக்கும் கூட கிட்டதட்ட அதுபோலவே இருந்தது.

அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு (பதினாங்கு நிமிடங்கள் தான்.. தப்பிச்சீங்க!) கிடைத்தது. அது மேலே!

இது பற்றி சிந்தநதி போட்ட பதிவு இங்கே!

தம்பி லக்கி உடைத்த டீவி இங்கே! {ஜெயா டீவியில் வந்தது பிடிக்காமல் தான் அவர் டிவியை உடைத்து விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு!} :)

[இந்த விடியோவை நண்பர்.ப்ரியன் தான் வலையேற்றிக்கொடுத்தார். ஆனால்.. ஒரே நாளில் கூகிள் இந்த விடியோவை ரிஜெக்ட் செய்து விட்டதாம். வேறு எங்காவது வலையேற்ற முடியுமான்னு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படி ஏற்றியதும் வேறு சுட்டி தருகிறேன். :( ]

நண்பர் ப்ரியன் இங்கே அப்லோட் பண்ணி இருக்காராம். 

ஜூலை 30, 2007 at 12:54 பிற்பகல் 17 பின்னூட்டங்கள்

Older Posts


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

  • ஏதும் இல்லை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 13,365 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய இடுகைகள்

வகைகள்

ஓடைகள்


Follow

Get every new post delivered to your Inbox.